டிரெண்டிங்

பாஜக ஆட்சி அமைப்பதை‌ தடு‌க்க சந்திரபாபு நாயுடு தீவிரம்

பாஜக ஆட்சி அமைப்பதை‌ தடு‌க்க சந்திரபாபு நாயுடு தீவிரம்

webteam

மத்தியில் ஒரு மாற்று அணியை உருவாக்க வேண்டும் என்ற முனைப்புடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் ஆகியோர் முயற்சி எடுத்து வருகின்றனர். மே 23-ல் தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முன்பே ஒரு அணியை உருவாக்கி பாஜகாவிற்கு அதிர்ச்சியளைக்க முனைபில் தீவரமாக முயற்சியை மேற்கொள்கிறார் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு.

இந்நிலையில் சந்திரபாபு நாயுடு, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். மக்களவைத் தேர்‌‌தலுக்கான கடைசிக்கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறும் நிலையில், அடுத்த ஆட்சி அமைப்பது தொடர்பாக, பல்வேறு கட்சித் தலைவர்களை சந்தித்து வருகிறார். இதற்காக நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரை சந்தித்துப் பேசினார். மேலும் பாரதிய ஜனதாவுக்கு எதிரான மனநிலையில் உள்ள, தெலங்‌கானா ராஷ்டீரிய சமிதி உள்ளிட்ட அனைத்துக் கட்சியினரையும், மெகா கூட்டணிக்கு வரவேற்பதாக அவர் தெரிவித்தார். 

இதனைதொடர்ந்து சந்திரபாபு நாயுடு இன்று காலை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்துள்ளார். அப்போது பாஜக ஆட்சி அமைவதை தடுக்க என்னென்ன முயற்சிகள் எடுப்பது என்பது குறித்து ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதியையும் சந்திரபாபு நாயுடு சந்திக்க உள்ளார்.

மேலும் கடந்த சில தினங்களுக்கு முன் திமுக பொருளாளர் துரைமுருகன் சந்திரபாபு நாயுடுவை சந்தித்தார், அப்போது, துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்தும் உடன் இருந்தார். பின்னர் ‘சந்திரபாபு உடனான சந்திப்பு அரசியல் ரீதியானது அல்ல. மனைவி மகனுடன் கோயிலுக்கு சென்றுவிட்டு திரும்பும் வழியில் அமராவதியில் சென்று சந்திரபாபு நாயுடுவை சந்தித்தேன்’ என துரைமுருகன் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.