டிரெண்டிங்

ஜெயலலிதாவின் மகள் என்று கூறி விளம்பரம் தேடுகிறார் அம்ருதா: ஜெ.தீபா குற்றச்சாட்டு

ஜெயலலிதாவின் மகள் என்று கூறி விளம்பரம் தேடுகிறார் அம்ருதா: ஜெ.தீபா குற்றச்சாட்டு

webteam

விளம்பரம் தேடிக்கொள்ளவே அம்ருதா என்பவர், தான் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மகள் என்று கூறுவதாக எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் பொதுச்செயலாளர் ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மகள் என்று பெங்களூரைச் சேர்ந்த அம்ருதா என்கிற பெண் ஒருவர் நேற்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது தமிழக அரசியலில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அதிமுக தரப்பில் எந்தவொரு விளக்கமும் தரப்படவில்லை. இந்நிலையில் அம்ருதாவின் வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது. அத்துடன் அவரை கர்நாடக உயர்நீதிமன்றத்திற்கு செல்லுமாறு உத்தரவிட்டது.

மேலும் புதிய தலைமுறைக்கு பிரத்யேகமாக பேட்டி அளித்த அம்ருதா பல தகவல்களை தெரிவித்தார். இந்நிலையில் மறைந்த ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். அதில், ஜெயலலிதாவின் மகள் என்று கூறுவது வெறும் வதந்தி மட்டுமே என்றார். மேலும் விளம்பரம் தேடிக்கொள்ளவே அம்ருதா என்பவர், தான் மறைந்த ஜெயலலிதாவின் மகள் என்று பொய்யான தகவலை பரப்புவதாக தெரிவித்தார். அதேபோல் சந்தியா ஜெயராம் தம்பதியருக்கு ஜெயகுமார், ஜெயலலிதா என்ற இரண்டு பேர் மட்டுமே சட்டபூர்வமான வாரிசு என்றும், வேறு யாரும் உரிமை கோரினால் அவர்கள் போலியானவர்கள் என்றும், வீண் வதந்திகளை பரப்புவர்கள் என்றும் தீபா கூறினார்.