அமமுக மொத்தமாக 195 வேட்பாளர்களை அறிவித்துவிட்டதால் தேமுதிக உடன் கூட்டணி இல்லை என்பது உறுதியாகிவிட்டது.
அதிமுகவுடன் கூட்டணியிலிருந்து விலகிய தேமுதிக அமமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. எதிர்பார்த்த தொகுதிகளை அமமுக ஒதுக்க முன்வராததால் கூட்டணி பேச்சுவார்த்தையை நேற்றே தேமுதிக கைவிட்டது. தனித்து போட்டியிட முடிவு செய்து 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியலை தேமுதிக தயாரித்து வந்த நிலையில், தனித்து போட்டியிட பெரும்பாலான தொண்டர்கள் விரும்பவில்லை என கூறப்படுகிறது.
இதனால், மீண்டும் அமமுகவுடன் கூட்டணி குறித்து தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியானது. பிற்பகலில் அக்கட்சி தலைவர் விஜயகாந்தை, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் சந்தித்து பேச உள்ளதாகக கூறப்பட்டது. ஆனால், அமமுக சார்பில் 130 வேட்பாளர்கள் கொண்ட மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதனால், தேமுதிக உடனான கூட்டணி இல்லை என்பது உறுதியாகிவிட்டது.
இந்நிலையில், தேமுதிகவின் வேட்பாளர் பட்டியல் நாளை மறுநாள் வெளியிடப்படும் என்று அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் பார்த்தசாரதி கூறியுள்ளார்.