டிரெண்டிங்

பேஸ்புக்கிலும் மோடி வழியில் அமித்ஷா

பேஸ்புக்கிலும் மோடி வழியில் அமித்ஷா

webteam

பேஸ்புக்கில் மோடிக்கு பின் ஒரு கோடி பேர் பின்தொடரும் இந்திய அரசியல்வாதியாக பாஜக தலைவர் அமித்ஷா உள்ளார். 

பேஸ்புக்கில் அதிகமானவர்கள் பின்தொடரும் இந்திய தலைவராக பிரதமர் மோடி இருந்து வருகிறார். பேஸ்புக்கில் இவரை 4 கோடியே 25 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். மோடிக்கு அடுத்தபடியாக அதிகமானவர்கள் பின் தொடரும் இந்திய தலைவராக அமித்ஷா இருந்து வருகிறார். இவரை பேஸ்புக்கில் ஒரு கோடியே 20 ஆயிரம் பேர் பின்தொடர்கிறார்கள். இதே போன்று டுவிட்டரில் 58 லட்சத்து 90 ஆயிரம் பேர் பின் தொடர்கிறார்கள். இதே போல் பேஸ்புக்கில் பா.ஜ.க கட்சி பக்கத்தை பின் தொடர்வோர் எண்ணிக்கையும் ஒரு கோடிக்கு அதிகமாக உள்ளது.