டிரெண்டிங்

‘திமுகவினருக்கு மட்டும் இந்த சலுகையா‘ - வாக்கு எண்ணும் மையம் முன்பு அதிமுகவினர் தர்ணா

‘திமுகவினருக்கு மட்டும் இந்த சலுகையா‘ - வாக்கு எண்ணும் மையம் முன்பு அதிமுகவினர் தர்ணா

kaleelrahman

கும்பகோணம் வாக்கு எண்ணும் மையத்தின் முன்பு அதிமுகவினர் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திமுக கட்சியினர் வாக்கு எண்ணும் மையத்தின் முன்பு அதிக வாகனத்தில் வந்ததாக குற்றம்சாட்டி அதிமுகவினர் வாக்கு எண்ணும் மையத்தின் முன்பாக அமர்ந்து, "எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் திமுக கட்சியினர் அதிகப்படியாக வாக்கு எண்ணும் மையத்தில் இருக்கிறார்கள்? அவர்களை மட்டும் அனுமதித்தது ஏன்? அவர்களை அனுமதித்தது போல் ஆனைத்து கட்சியினரையும் அனுமதிக்க வேண்டும்" என கோசமிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து அனைவரின் மீதும் வழக்குப்பதிய வேண்டும். அப்போதுதான் நாங்கள் எழுந்து செல்வோம் என்று வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து தர்ணாவில் ஈடுபட்டவர்களிடம் ஏடிஎஸ்பி ஜெயசந்திரன், டிஎஸ்பி அசோகன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார். சட்டபடி அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதின் பேரில் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.