தனது தந்தை முலாயம் சிங் யாதவ்-வின் தொகுதியான அசம்கரில் அவர் மகன் அகிலேஷ் யாதவ் போட்டியிடுகிறார்.
மக்களவை தேர்தலில் போட்டியிடும் தங்கள் அடுத்த வேட்பாளர்கள் பட்டியலை சமாஜ்வாதி கட்சி வெளியிட்டுள்ளது. இதில் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான அசம் கான், ராம்பூர் தொகுதியில் போட்டியிட உள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமாஜ்வாதி கட்சி வலுவாக உள்ள மெயின் புரி தொகுதியில் அக்கட்சியின் நிறுவனத் தலைவர் முலாயம் சிங் யாதவ் போட்டியிடுவர் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ் கன்னோஜ் தொகுதியில் போட்டியிட உள்ளார். அகிலேஷின் நெருங்கிய உறவினர்கள் அக்சய் யாதவ் மற்றும் தர்மேந்திர யாதவ் ஆகியோரும் சமாஜ்வாதி சார்பில் போட்டியிடுகின்றனர். அகிலேஷ் யாதவ், அசம்கர் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில்தான் அவரது தந்தை முலாயம் சிங் யாதவ் கடந்த முறை போட்டியிட்டு வெற்றி பெற்றார்.