டிரெண்டிங்

அதிமுகவுக்கு டாடா குழும அறக்கட்டளை ரூ.46.78 கோடி நன்கொடை

Sinekadhara

2019-2020-ஆம் ஆண்டில்  ரூ.20 ஆயிரத்துக்கும் மேல் பெறப்பட்ட மொத்த பங்களிப்புகளில் டாடா குழும அறக்கட்டளை பங்களிப்பு மட்டும் 90 சதவீதம் என்ற அளவில் உள்ளது.

2019-2020-ஆம் ஆண்டில் டாடா குழும தேர்தல் அறக்கட்டளை சார்பில் அஇஅதிமுகவுக்கு ரூ.46.78 கோடி நன்கொடையாக கொடுக்கப்பட்டுள்ளது. இது தனி நபரால்/குழுமத்தால் ரூ.20 ஆயிரத்துக்கும் மேல் பெறப்பட்ட மொத்த பங்களிப்புகளில் கிட்டத்தட்ட 90% ஆகும். இதுதவிர ஐடிசி நிறுவனமும் 2019-2020இல் அஇஅதிமுக தேர்தல் நன்கொடையாக ரூ.5.39 கோடியை இரண்டு தனி காசோலைகளாக வழங்கியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஆனால் 2018-2019ஆம் ஆண்டில் ரூ.20000க்கும் மேல் தனிநபர்/ குழுமத்தால் பங்களிப்பு இருக்கவில்லை என அஇஅதிமுக கூறியுள்ளது. டாடா குழும தேர்தல் அறக்கட்டளைதான் 2018-19ஆம் ஆண்டில் அரசியல் நிகழ்வுகளுக்கு முக்கிய பங்கு ஆற்றியுள்ளது. இது பாஜகவிற்கு ரூ.356 கோடியும், காங்கிரஸிற்கு ரூ.55.6 கோடியும் அளித்துள்ளது.