டிரெண்டிங்

காவிரி விவகாரம்: அதிமுக உண்ணாவிரத தேதி திடீர் மாற்றம்

காவிரி விவகாரம்: அதிமுக உண்ணாவிரத தேதி திடீர் மாற்றம்

rajakannan

உச்சநீதிமன்றம் ஆணையிட்ட பின்னரும் மேலாண்மை வாரியம் அமைக்கப்படாதது இந்திய நீதித்துறைக்கும் தமிழக மக்களுக்கும் மிகப்பெரிய துரோகம் என அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மாவட்ட தலைநகரங்களிலும் புதுச்சேரியிலும் நடைபெறும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கட்சி தொண்டர்களும் நிர்வாகிகளும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதம் நடைபெறுகிறது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகம் முழுவதும் வரும் ஏப்ரல்2ஆம்தேதி அதிமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஏற்கனவே தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், தேதி மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. 

காவிரி மேலாண்மை வாரி‌யம் அமைக்க உச்சநீதிமன்றம் விதித்த காலக்கெடு முடிந்த நிலையில், மத்திய அரசு தரப்பில் இருந்து இதுவரை எந்த அறிவிப்பும் இல்லை. காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக வரும் நாளை (சனிக்கிழமை) நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்படும் என்று ‌தெரிகிறது.