டிரெண்டிங்

சிவராஜ் சிங் சவுகான் ஹெலிகாப்டர் தரையிறங்க தடை: மம்தா அதிரடி

சிவராஜ் சிங் சவுகான் ஹெலிகாப்டர் தரையிறங்க தடை: மம்தா அதிரடி

rajakannan

 அமித்ஷா, யோகி ஆதித்யநாத் வரிசையில் சிவராஜ் சிங் சவுகான் ஹெலிகாப்டர் தரையிறங்க மேற்குவங்க அரசு அனுமதி மறுத்துள்ளது. 

மத்தியப் பிரதேச முன்னாள் முதலமைச்சரும், பாஜக தேசிய துணைத் தலைவருமான சிவராஜ் சிங் சவுக்கான், மேற்குவங்க மாநிலத்தில் இரண்டு இடங்களில் இன்று தேர்தல் பரப்புரை நடத்த திட்டமிட்டிருந்தார். முர்ஷிதாபாத், மித்னாப்பூர் மாவட்டங்களில் இந்தக் கூட்டம் நடைபெறவிருந்தது. இந்நிலையில், முர்ஷிதாபாத்தில் கூட்டம் நடைபெறவிருந்த பகுதியில் சிவராஜ் சிங் ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிகிறது. 

இதுகுறித்து பாஜக மாநில பொதுச் செயலாளர் சயந்தன் பாசு கூறுகையில், “முர்ஷிதாபாத்தின் பஹரம்பூரில் சிவராஜ் சிங்கின் ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதிக் மறுக்கப்பட்டுள்ளதாக இந்தக் கூட்டத்தை ரத்து செய்ய முடிவு செய்துள்ளோம். காரக்பூரில் நடைபெறும் கூட்டத்தில் அவர் கலந்து கொள்வார்” என்றார். 

முன்னதாக, உத்திரப் பிரதேச முதல்வர் யோகிக்கு ஹெலிகாப்டரில் செல்வதற்கு மேற்குவங்க அரசு அனுமதி வழங்காததால் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க அவர், காரில் சென்றார். யோகியைப் போல் சிவராஜ் சிங் சவுகானும் இன்று காரில் சென்று ஒரு கூட்டத்தில் மட்டும் பேசுகிறார். மேற்குவங்கத்தில் பாஜகவை பார்த்து மம்தா அரசு பயப்படுகின்றது, அதனால்தான் மக்களை சந்திக்க அனுமதி மறுக்கிறது என்று சவுகான் குற்றம்சாட்டியுள்ளார்.