டிரெண்டிங்

எடப்பாடி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிடக்கோரி வழக்கு

எடப்பாடி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிடக்கோரி வழக்கு

webteam

எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மையை நிரூபிக்க, ஆளுநர் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணைந்துள்ள நிலையில், டிடிவி தினகரனுக்கு ஆதரவாக 19 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்குப் தொடரப்பட்டுள்ளது. வழக்கறிஞர் புகழேந்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார்.

இன்று காலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்திய பின், டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேருக்கும் சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார். முதல்வருக்கான ஆதரவை திரும்பப் பெறுவதாக ஆளுநரிடம் மனு அளித்த எம்.எல்.ஏ.க்களுக்கு இந்த நோட்டீஸை அவர் அனுப்பியுள்ளார். பேரவையில் இருந்து 19 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய கொறடா ராஜேந்திரன் கோரியதால் சபாநாயகர் இந்த நோட்டீஸை அனுப்பியுள்ளதாகவும், இதற்கு பதிலளிக்க அவர்களுக்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

வழக்கறிஞர் புகழேந்தி தொடர்ந்த இந்த வழக்கில், எடப்பாடி பழனிசாமி அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.