டிரெண்டிங்

“விழிப்புடன் பணியாற்ற வேண்டும்”-முகவர்களுக்கு அதிமுக அறிவுறுத்தல்

“விழிப்புடன் பணியாற்ற வேண்டும்”-முகவர்களுக்கு அதிமுக அறிவுறுத்தல்

Rasus

வாக்கு எண்ணிக்கையின்போது தங்கள் கட்சி முகவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சங்கள் குறித்து அதிமுக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதில், வரும் 23-ஆம் தேதி வாக்கு எண்ணும் மையத்தில் விழிப்புடன் பணியாற்றி வெற்றிக்கனியை சிந்தாமல், சிதறாமல் கட்சிக்கு அர்ப்பணிக்க பணியாற்றுமாறு அதிமுக முகவ‌ர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன‌ர்.

காலை 6 மணிக்கே வாக்கு எண்ணும் மையத்துக்கு சென்றுவிட வேண்டும், வாக்குப்பதிவு இயந்திரங்களில் வைக்கப்பட்டுள்ள சீல் முறையாக உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என முகவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் தாங்கள் எழுதி வைத்திருக்கும் வாக்கு விவரங்களை தேர்தல் அதிகாரியிடம் சரிபார்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் யாரேனும் மாற்றுக்கட்சியினருக்கு ஆதரவாகவும், முறைகேடாகவும் செயல்படுகிறார்களா என தீவிரமாக கண்காணிக்கவும் அதிமுக முகவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.