டிரெண்டிங்

அதிமுக ஒரு ஃபீனிக்ஸ் பறவை: அமைச்சர் செல்லூர் ராஜு

அதிமுக ஒரு ஃபீனிக்ஸ் பறவை: அமைச்சர் செல்லூர் ராஜு

webteam

அதிமுக ஒரு ஃபீனிக்ஸ் பறவையைப் போல் என்றுமே அழியாது என கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

பிள்ளையார்பட்டியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செல்லூர் ராஜு, உட்கட்சி பிரச்னை இருக்கும் போதிலும், யாரும் வேறு கட்சிகளுக்குச் செ‌ல்லவில்லை என கூறினார். பேரறிவாளன் பரோல் என்பது ஜெயலலிதா அரசு எடுத்த முயற்சியே, பேரறிவாளன் உட்பட மற்றவர்களின் விடுதலைக்காக சட்டமன்றத்திலே சட்டம் கொண்டு வந்தவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா என்றும், பேரறிவாளன் உள்ளிட்டோரை, தூக்கு தண்டனையில் இருந்து காப்பற்றியதும் ஜெயலலிதா தான் என்றும் அவர் தெரிவித்தார். நீட்தேர்வு என்பது காங்கிரஸ் மற்றும் திமுக கொண்டு வந்ததே என்ற அவர், அதனை நாங்கள் தடுத்து நிறுத்த போராடினோம்" என்றும் கூறினார்.  

மேலும் "அதிமுக என்பது பீனிக்ஸ் பறவைப் போல் என்றும், அது அழிவது போல் தோன்றும் ஆனால் அது உடனே உயிர்த்தெழும் அது போல் தான் நாங்கள் என்றார். அதிமுகவின் அரசு மீதமுள்ள நான்கு ஆண்டுகள் மட்டுமல்ல, வருகிற 2021 சட்டமன்ற தேர்தலிலும் உறுதியாக ஆட்சியை பிடிப்போம். இதில் மாற்று கருத்து இல்லை என்றும் கட்சியில் பிளவு ஏற்பட்ட பொழுதிலும், யாரும் மற்ற கட்சிக்கு செல்லவில்லை என்பது குறிப்பிடதக்கது" என்றும் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.