டிரெண்டிங்

காவிரி- கோதாவரி திட்டம், கல்விக் கடன் ரத்து- அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் ஓபிஎஸ் தகவல்

காவிரி- கோதாவரி திட்டம், கல்விக் கடன் ரத்து- அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் ஓபிஎஸ் தகவல்

Rasus

மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்கான அதிமுகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓபிஎஸ் வெளியிட்டார். தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்..

* அம்மா தேசிய வறுமை ஒழிப்புத் திட்டத்தின் கீழ், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.1500 வழங்கப்படும்

* வறுமையில் உள்ள நிலமற்ற விவசாய தொழிலாளர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1500 வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்

* பிலிப்பைன்ஸ் நாட்டை முன்மாதிரியாக கொண்டு எம்ஜிஆர் தேசிய திறன் மோம்பாடு திட்டம் அமைக்கப்படும்

* காவிரி-கோதாவரி திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்

* கடலில் வீணாக நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்

* மாணவர்கள் பெற்ற கல்விக் கடனை ரத்து செய்ய மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்

* நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க தொடர்ந்து வலியுறுத்தப்படும்

* தனியார் துறையிலும் இடஒதுக்கீட்டிற்கு புதிய சட்டம் இயற்ற வலியுறுத்தப்படும்

* கல்வியை பொதுப் பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்

* இலங்கை இனப்படுகொலை விவகாரத்தில் சர்வதேச விசாரணை நடத்த வலியுறுத்தப்படும்.

* பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரைவும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்படும்

* பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தக் கூடாது என வலியுறுத்தப்படும்

* தமிழ்மொழியை மத்திய அரசு அலுவலகங்களில் அலுவல் மொழியாக்க நடவடிக்கை எடுக்கப்படும்

* காவிரி டெல்டாவை பாதிக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து கிடைக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.

* மதம் மாறினாலும் சாதி ரீதியிலான இடஒதுக்கீடு பாதிக்கப்படாமல் இருக்க புதிய சட்டம்