டிரெண்டிங்

தாழ்த்தப்பட்டோருக்கு பதவி ஒப்புக்குத்தான்: திருமாவளவன் குற்றச்சாட்டு.... பொன்.ராதாகிருஷ்ணன் மறுப்பு

தாழ்த்தப்பட்டோருக்கு பதவி ஒப்புக்குத்தான்: திருமாவளவன் குற்றச்சாட்டு.... பொன்.ராதாகிருஷ்ணன் மறுப்பு

Rasus

தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்குக் வழங்கப்படும் பதவி ஒப்புக்காகத்தான் என்பது குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக வெங்கய்ய நாயுடுவை அறிவித்ததன் மூலம் தெரி்ய வருகிறது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.

நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஒப்புக்கு ஒரு குடியரசுத் தலைவர் வேட்பாளர். உண்மைக்கு வெங்கய்ய நாயுடு என்றார். பல இடங்களில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த தலைவர்கள் ஊராட்சி மன்ற தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்படுவதுண்டு. ஆனால் ஊராட்சி மன்ற துணைத் தலைவர்தான் நிர்வாகத்தை கவனிப்பார். அப்படி குடியரசுத் தலைவர் பதவியும் ஒப்புக்கான பதவியாகத்தான் இருக்கப் போகிறது" என்றார்.

இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், "எந்தவொரு விஷயத்தையும் ஜாதிக் கண்ணோட்டத்தோடு தயவு செய்து பார்க்க வேண்டாம். இந்த நாட்டின் குடியரசுத் தலைவர் நாட்டின் முதல் குடிமகன். அவருக்கென்று தனித் தகுதிகள் இருக்கின்றன. அவருக்கான பொறுப்பை அவர்தான் கவனிக்க முடியும். துணை குடியரசுத் தலைவர் உள்ளிட்ட யாரும் அதனை பார்ப்பதற்கான வாய்ப்பே கிடையாது. அவரை ஜாதிக் கண்டோட்டது பார்ப்பதை விட வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பாஜக கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்ட நிலையில் துணை குடியசுத் தலைவராக வெங்கய்ய நாயுடு அறிவிக்கப்பட்டார்.