தமிழக துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வத்திற்கு கூடுதல் இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அதிமுக அணிகள் நேற்று இணைந்தபோது ஓ.பன்னீர்செல்வத்திற்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அத்துடன் தமிழக அமைச்சரவையில் நிதி, வீட்டுவசதித்துறை, நகர்புற திட்டமிடல் உள்ள இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன.
இந்நிலையில் துணை முதலமைச்சர் ஓபிஎஸ்-க்கு கூடுதல் இலாகாக்கள் இன்று ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படி, அமைச்சர் ஜெயக்குமார் வகித்து வந்த, சட்டமன்றம், திட்டமிடல், தேர்தல், பாஸ்போர்ட் முறை ஆகிய துறைகள், பன்னீர்செல்வத்திற்கு கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளன. ஜெயக்குமார், மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தம் ஆகிய துறைகளை மட்டும் கவனிப்பார் என ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.