டிரெண்டிங்

காவி நிறமாகவில்லை கர்நாடகம் : பிரகாஷ் ராஜ்

காவி நிறமாகவில்லை கர்நாடகம் : பிரகாஷ் ராஜ்

webteam

பா.ஜ.க அரசால் கர்நாடகாவில் 55 மணி நேரம் கூட தாக்குபிடிக்க முடியவில்லை என்று பிரகாஷ் ராஜ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

கர்நாடகத்தில் பெரும்பான்மை இல்லாமல் 104 எம்எல்ஏக்களுடன் எடியூரப்பா முதல்வராகப் பதவி ஏற்றார். இதை எதிர்த்து காங்கிரஸ், மதச் சார்பற்ற ஜனதா தளம் சார்பில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் எடியூரப்பா அரசை 19-ம் தேதி மாலை 4 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டது. ஆனால், பெரும்பான்மை வாக்கெடுப்பு நடக்கும் முன்பே எடியூரப்பா முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.கவுக்கு எதிராகத் தீவிரமாக சுற்றுப் பயணம் செய்து நடிகர் பிரகாஷ் ராஜ் பிரச்சாரம் செய்தார். பா.ஜ.க ஆட்சியைப் பறிகொடுத்தது குறித்தும், எடியூரப்பா முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தது குறித்தும் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். 

அதில், ''கர்நாடக மாநிலம் இனி காவிமயமாகாது. ஆனால், வண்ணமயமாக இருக்கும். மேட்ச் தொடங்கும் முன்பே முடிந்துவிட்டதே. 56ஐ விடுகங்கள் வெறும் 55 மணிநேரம் நேரம் கூட பா.ஜ.க அரசால் தாக்குப்பிடிக்க முடியவில்லை . நகைச்சுவை ஒருபக்கம் இருந்தாலும், கர்நாடக மக்களே இனிமேல் நடக்கவிருக்கும் மோசமான அரசியலை பார்க்க தயாராக இருக்கங்கள். நான் தொடர்ந்து மக்களின் பக்கமே இருப்பேன், தொடர்ந்து கேள்விகள் கேட்டுக்கொண்டே இருப்பேன்" என்று பதிவிட்டுள்ளார்.