தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரர் எழுந்து நிற்காதது குறித்த கேள்விக்கு நடிகர் கமல்ஹாசன் தன் பாணியில் குழப்பமாக பதிலளித்தார்.
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அவமரியாதை செய்ததாக விஜயேந்திரருக்கு எதிராக தமிழகம் முழுவதும் பவ்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் விஜயேந்திரர் விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் கமல்ஹாசன், தியானத்தில் இருப்பது அவர் கடமை. எழுந்து நிற்பது என் கடமை என்று குழப்பமான பதில் அளித்தார்.
மேலும், “தேவையான இடங்களில்தான் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்க வேண்டும். கண்ட இடங்களில் தமிழ்த்தாய் வாழ்த்தை இசைக்கக் கூடாது. திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்க வேண்டும் என்ற போதும் இதைதான் கூறினேன். இதுபோல் ஏதாவது நடக்கக் கூடும் என்று தெரிவித்தேன். ஊழலின் போது கூடத்தான் மக்கள் தியானத்தில் இருந்துவிட்டார்கள். அதனால்தான் ஊழலை கண்டு கொள்ளாமல் இருந்துவிட்டார்கள். தியானத்தில் இருப்பது அவர் கடமை. எழுந்து நிற்பது என் கடமை” என்று கூறினார்.
தியானத்தில் இருப்பது அவரது கடமை என்பதன் மூலம் கமல் விஜயேந்திரர் எழுந்து நிற்காதது சரி என்கிறா அல்லது தவறு என்கிறாரா என்பதை கூறாமல் குழப்பிவிட்டார்.