டிரெண்டிங்

சசிகலாவை நீக்க நடவடிக்கை: அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் அறிவிப்பு

சசிகலாவை நீக்க நடவடிக்கை: அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் அறிவிப்பு

Rasus

அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து சசிகலாவை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக-வின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மறைவிற்கு பின் அதிமுக ஓபிஎஸ்- ஈபிஸ் தரப்பில் இரு அணிகளாக பிரிந்தன. அணிகள் இணைப்புக்கு ஓபிஎஸ் தரப்பில் இருந்து, ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை வேண்டும். சசிகலா குடும்பத்தை முழுமையாக கட்சியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது. அதன்படி ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார். ஜெயலலிதாவின் இல்லமான வேதா நிலையமும் அவரது நினைவிடமாக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, பிரிந்த அதிமுக-வின் இரு அணிகளும் இன்று மீண்டும் இணைந்தன. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலத்திற்கு வருகை புரிந்த முதலமைச்சர் பழனிசாமி மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் இருவரும் ஒருவருக்கொருவர் கைகுலுக்கி இணைந்தனர். இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து சசிகலாவை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிமுக-வின் துணை ஒருங்கிணைப்பாளரும், எம்.பி.யுமான வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். பொதுச்செயலாளரை நீக்க வேண்டுமானால் அதிமுக-வின் பொதுக்குழு கூட வேண்டும். எனவே பொதுக்ழுழு விரைவில் கூடும் போது அதிமுக பொதுச் செயலாளரரை நீக்க தீர்மானம் நிறைவேற்றப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.