டிரெண்டிங்

மல்யுத்த வீராங்கனை பபிதா போகட் இன்று பாஜகவில் இணைகிறாரா?

மல்யுத்த வீராங்கனை பபிதா போகட் இன்று பாஜகவில் இணைகிறாரா?

webteam

பிரபல மலயுத்த விராங்கனை பாபிதா போகட் பாஜகவில் இன்று இணையுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மோடி தலைமையிலான பாஜக அரசு இரண்டாவது முறையாக பதவியேற்ற பின் பாஜகவில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணி தீவிரமடைந்து வருகிறது. அத்துடன் சில மாநிலங்களில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதற்கு முன்பு கட்சியை பலப்படுத்த பாஜக திட்டமிட்டுள்ளது. 

அதன்படி இந்தியாவின் பிரபல மல்யுத்த வீராங்கனையான பாபிதா போகட் மற்றும் அவரது தந்தை ஆகிய இருவரும் இன்று பாஜகவில் இணையுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பாபிதா போகட்டின் தந்தை மகாபீர் போகட் ஹிந்துஸ்தான் டைம்ஸ் தளத்திற்கு பேட்டியளித்துள்ளார். அதில், “நானும் என்னுடைய மகள் பாபிதா போகட் ஆகிய இருவரும் நீண்ட ஆலோசனைக்கு பிறகு பாஜகவில் இணையும் முடிவை எடுத்துள்ளோம். பாஜக அரசு காஷ்மீருக்கு அளித்து வந்த சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்து சிறப்பான முடிவை எடுத்துள்ளது. அத்துடன் ஹரியானாவில் மனோகர் லால் கட்டர் தலைமையிலான பாஜக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த அரசு வெளிப்படையாக செயல்பட்டு இளைஞர்கள் பலருக்கு நல்ல வேலைவாய்ப்பை தந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார். 

ஹரியானா மாநிலத்தில் இந்தாண்டு இறுதியில் தேர்தல் நடைபெறவுள்ளது. ஆகவே இந்தத் தேர்தலில் பாபிதா போகட் பாஜக சார்பில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.