ஆன்லைன் ஷாப்பிங் PT
டிரெண்டிங்

யார் சொன்னது பெண்கள் தான் ஆன்லைன் ஷாப்பில் அதிகம் செலவு செய்கிறார்கள் என்று? ஆய்வு சொன்ன புதிய தகவல்

இண்டர்நெட் வரும் முன் மக்கள் தங்களுக்கு தேவைப்படும் பொருட்களை வாங்குவதற்கு கடை கடையாக ஏறி இறங்கியும், ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பயணித்தும் தேவைப்படும் பொருட்களை வாங்கிகொண்டிருந்தனர்.

Jayashree A

இண்டர்நெட் காலங்களுக்கு முன் மக்கள் தங்களுக்கு தேவைப்படும் பொருட்களை வாங்குவதற்கு கடை கடையாக ஏறி இறங்கியும், ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பயணித்தும் தேவைப்படும் பொருட்களை வாங்கிகொண்டிருந்தனர். ஆனால், இண்டர்நெட் உபயோகத்தில் வந்தபிறகு மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை தேடிதேடி சென்று வாங்குவதை தவிர்த்து, ஆன்லைன் ஷாப்பிங் செய்வதை வழக்கமாக்கிக்கொண்டு வருகின்றனர்.

அதேசமயம், மக்களின் தேடும் வசதியை குறைக்கும் பொருட்டு அமேசான், ஃப்ளிப்ட்கார்ட் போன்ற நிறுவனங்கள் ஆன்லைன் மற்றும் செயலிகளின் வாயிலாக தயாரிப்பாளர்கள் நுகர்வோருக்கு நேரடி விற்பனையும் செய்து வருகின்றனர். இதன் மூலம் தள்ளுபடியின் வாயிலாக பொருட்களும் குறைந்த விலையில் கிடைப்பதால் உணவிலிருந்து, வீட்டிற்கு உபயோகப்படுகின்ற பொருட்கள் வரை அதிகளவில் பொருட்களை ஆன்லைன் மூலமே வாங்குவதை மக்கள் வழக்கமாக்கிக்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஐஐஎம்-அகமதாபாத் ஒரு ஆய்வு ஒன்றை நடத்தியது. அதன்படி அதிகளவு ஆன்லைனில் பொருட்களை வாங்குபவர்கள் ஆண்களா அல்லது பெண்களா என்று தெரிந்துக்கொள்ள கிட்டத்தட்ட 25 மாநிலங்களில் 35000ற்கும் அதிகமான மக்களிடம் சர்வே ஒன்று எடுக்கப்பட்டது. இதன் அறிக்கையானது தற்பொழுது வெளிவந்துள்ளது.

இதன்படி ஆண்கள் பெண்கள் செலவிடும் தொகையை விட 36% அதிகமாக செலவுசெய்வதாக புள்ளிவிவரம் தெரியவந்துள்ளது. ஆண்கள் 47% ஃபேஷனுக்காகவும், 37% யூட்டிலிட்டிகளுக்காகவும், 23% எலக்ட்ரானிக்ஸிற்காகவும் ஷாப்பிங் செய்வதாக புள்ளிவிவரம் தெரியவந்துள்ளது.

பெண்களில் 58% பேர் ஃபேஷனுக்காகவும், 28% பேர் அன்றாட தேவைகளுக்காகவும் 16% பேர் எலக்ட்ரானிக்ஸிற்காகவும் ஷாப்பிங் செய்வதாகவும் புள்ளிவிவரம் தெரிவித்துள்ளது.

ஷாப்பிங் செய்யும் நேரம்:

இதில் ஆண்களை விட பெண்கள் ஷாப்பிங் செய்வதில் அதிக நேரத்தை எடுத்துக்கொள்கின்றனர். இதில் ஜெய்ப்பூர் லக்னோ நாக்பூர் கொச்சி போன்ற நகரங்களில் வசிக்கும் நுகர்வோர் ஃபேஷனுக்காக அதிக அளவில் செலவு செய்வதாகவும் தெரியவந்துள்ளது.