டிரெண்டிங்

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது - சென்னை வானிலை மையம்

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது - சென்னை வானிலை மையம்

webteam

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியதாவது, “தென்கிழக்கு, தெற்கு அந்தமானையொட்டிய வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான 24 மணி நேரத்தில் அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையும். காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால் மீனவர்கள் தெற்கு வங்கக்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம்.” என தெரிவித்துள்ளது.