டிரெண்டிங்

சென்னை: இறந்த 7 வயது மகனுடன் 3 நாட்கள் வசித்த தாய்.. பசி பட்டினியால் இறந்தாரா என விசாரணை

சென்னை: இறந்த 7 வயது மகனுடன் 3 நாட்கள் வசித்த தாய்.. பசி பட்டினியால் இறந்தாரா என விசாரணை

kaleelrahman

திருநின்றவூர் சி.டி.எச் சாலையில், சரஸ்வதி என்ற ரேவதி வசித்து வருகிறார். ஹோமியோபதி மருத்துவம் பார்த்து வந்த இவர், கணவர் ஜீவானந்தத்தை விட்டு பிரிந்த தனது 7 வயது மகன் சாமுவேலுடன் தனியாக வசித்து வருகிறார்.


இந்தநிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக வருமானம் இல்லாததால் பசி, பட்டினியால் தனது மகன் இன்று இறந்துவிட்டதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தார் சரஸ்வதி. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற திருநின்றவூர் காவல் துறையினர் சரஸ்வதி வீட்டிற்கு சென்று சோதனை செய்தனர்.


அங்கு 7 வயது சிறுவன் அழுகிய நிலையில் உயிர் இழந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து சிறுவனின் தாயிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுவன் உயிரிழந்து 3 தினங்களுக்கு மேல் அவரது தாய் சிறுவன் உடலுடன் வசித்து வந்துள்ளார்.


உண்மையில் சிறுவன் பசியால் உயிர் இழந்தானா அல்லது கொலை செய்து நாடகமாடி வருகிறாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுவனின் தாய் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் எனக் கூறப்படுகிறது.