டிரெண்டிங்

தேங்காய் சிரட்டையில் கலை நயமிக்க பொருட்களை செய்து அசத்தும் மாணவன்...

தேங்காய் சிரட்டையில் கலை நயமிக்க பொருட்களை செய்து அசத்தும் மாணவன்...

kaleelrahman

பொது முடக்கத்தை கழிக்க தேங்காய் சிரட்டையில் கலை நயமிக்க பொருட்களை உருவாக்கிய மாணவர்.


தென்காசி மாவட்டம் தென்காசி ஐந்துவர்ணம் பள்ளிவாசல் தெருசை சேர்ந்தவர் மாணவர் தமீமுல் அன்சாரி. 12ஆம் வகுப்பு தேர்வு முடிவடைந்த நிலையில் கொரோனா காலம் தொடங்கியது. பொது முடக்கத்தால் வெளியே செல்ல முடியாத நிலையில் ஏதாவது செய்து நல்ல முறையில் பொழுதை கழிக்க வேண்டும். அதன்மூலம் வருமானம் ஈட்டும் நோக்கத்துடன் வீட்டில் பயன்படுத்தி தூக்கி எரியப்படும் தேங்காய் சிரட்டைகளை பயன்படுத்தி ஒரு டீ கப்பை முதன் முதலாக உருவாக்கினார்.


அதன் பின் அப்படியே தொடர்ந்து பல கலை நயமிக்க பொருட்களை செய்து அதன் மூலம் வருமானம் ஈட்டவும் துவங்கியுள்ளார். படிப்படியாக எழுத்துக்களை செய்ய ஆரம்பித்து அதன் மூலம் தேங்காய் சிரட்டையை பயன்படுத்தி பெயர் பலகைகள், ஜிமிக்கி, கம்மல், தோடு, செயின் போன்ற பல ஆபரணங்களை செய்து விற்கவும் தொடங்கியுள்ளார்.


மேலும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக கலை நயமிக்க சைக்கிள்கள், விளக்குகள் பொருத்தும் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய பொருட்கள் என பல கலை நயமிக்க பொருட்களை தாய், தங்கை, தம்பியின் உதவியோடு தயாரித்து வருகிறார்  இவர் செய்யும் இந்த சிரட்டை ஆபரணங்களை வாங்கவும் அவர் செய்து வைத்துள்ள பொருட்களை காணவும் அக்கம் பக்கத்தினர் இவரது வீட்டிற்கு வந்த வண்ணம் உள்ளனர்.

 
கொரோனா காலத்தில் வீட்டில் வீடியோ கேம்களில் முடங்கி கிடக்காமல் கிடைத்த நேரத்தை பயன்படுத்தி சுற்றுச்சூழலை காக்கும் வகையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக தேங்காய் சிரட்டையை கொண்டு கலை நயமிக்க பொருட்களை செய்துவரும் தமீமுல் அன்சாரிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது