டிரெண்டிங்

”தொல்ல தாங்கமுடியல சார்; எதாச்சும் செய்யுங்க” பக்கத்துவீட்டு கிளியால் நொந்துப்போன முதியவர்

”தொல்ல தாங்கமுடியல சார்; எதாச்சும் செய்யுங்க” பக்கத்துவீட்டு கிளியால் நொந்துப்போன முதியவர்

JananiGovindhan

பக்கத்து வீட்டில் வசிப்பவர் அண்டை வீட்டில் வசிப்பவர்களுக்கு தொந்தரவு கொடுக்கும் வகையில் நடந்துக்கொண்டால் காவல் துறையில் புகாரளிப்பது இயல்பானதாக இருக்கும்.

ஆனால் பக்கத்து வீட்டுக்காரர் வளர்க்கும் கிளி மீது ஒருவர் போலீசிடம் புகார் கொடுத்திருப்பது வெளியே தெரிய வந்திருக்கிறது. புனேவின் ஷிவாஜி நகர் பகுதியை சேர்ந்த 72 வயது முதியவர்தான் கிளி மீது புகாரளித்திருக்கிறார்.

சுரேஷ் ஷிண்டே என்ற முதியவர் தனது பக்கத்து வீட்டில் குடியிருக்கும் அக்பர் அம்ஜத் கான் மீதும், அவர் வளர்க்கும் கிளி மீதும் மூத்த குடிமக்களை தொந்தரவு செய்யும் வகையில் செயல்படுவதாக காத்கி காவல் நிலையில் புகார் கொடுத்திருக்கிறார்.

“அடிக்கடி கிளி கீச்சிடுவதை கேட்பதற்கு தொந்தரவாக இருக்கிறது என அம்ஜத் கானிடம் நேரடியாக கூறியும் அவர் காதில் போட்டுக்கொண்டதாக தெரியவில்லை. ஆகையால்தான் புகார் கொடுக்கிறேன்.” என சுரேஷ் ஷிண்டே தெரிவித்திருக்கிறார்.

இதனையடுத்து கிளியின் உரிமையாளரான அம்ஜன் கான் மீது அமைதியை மீறுதல் மற்றும் கிரிமினல் மிரட்டல் ஆகியவற்றிற்காக அடையாளம் காண முடியாத குற்றம் குறித்து நடவடிக்கை எடுத்துள்ளோம். விதிகளின்படி நடப்போம்,'' என காத்கி காவல்நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார்.