டிரெண்டிங்

துளிர்க்கும் நம்பிக்கை: 30 குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கிய நல்லுள்ளங்கள்!

துளிர்க்கும் நம்பிக்கை: 30 குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கிய நல்லுள்ளங்கள்!

Sinekadhara

ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு புதிய தலைமுறையின் துளிர்க்கும் நம்பிக்கை நிகழ்ச்சி மூலம் உதவி கிட்டியுள்ளது.

  • நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகேயுள்ள நாடுகாணி, பொன்னூர் கிராமத்தில் 30 குடும்பங்களுக்கு, சர்வதேச நகைச்சுவையாளர்கள் மன்றம் சார்பில் மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறிகள் வழங்கி உதவிசெய்யப்பட்டது
  • நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே சாந்தி, சற்குணம் என்ற மூதாட்டிகள் ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இன்றி தவித்துவந்தனர். அவர்களுக்கு துளிர்க்கும் நம்பிக்கை நிகழ்ச்சியின் மூலம் அதே பகுதியைச் சேர்ந்த மணோன்மணி- குராம சரவணன் தம்பதியர் அரிசி, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கி உதவினர்.
  • வேதாரண்யம் தாணிக்கோட்டகம் கிராமத்தில் மனைவி, இரு குழந்தைகளுடன் வசித்துவ ரும் மாற்றுத்திறனாளி ஐயப்பன் குளிர்பானம் கடை நடத்தி வந்தார். ஆனால், ஊரடங்கால் கடை மூடப்பட்டதால் வருமானம் இன்றி உணவுக்குகூட வழியின்றி தவித்துவந்த அக்குடும்பத்திற்கு இருசக்கர வாகனம் பழுது நீக்குவோர் சங்கத்தின் சார்பில் உதவி கிடைத்தது.
  • திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே பார்வைதிறன் மாற்றுத்திறனாளி தம்பதிக்கு திமுக பிரமுகர் தேவா 5 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கி உதவினார்.
  • அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே விஜயா என்ற பார்வைதிறனற்ற மாற்றுத்திறனாளி குடும்பம் ஊரடங்கால் வாழ்வாதாரம் இன்றி போராடிவந்தது. துளிர்க்கும் நம்பிக்கை நிகழ்ச்சி மூலம் அக்குடும்பத்திற்கு அதேபகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் செம்பேரி ஆறுமுகம், ஒரு மாதத்திற்கு தேவையான மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறி வழங்கினார்.

புதிய தலைமுறையின் 'துளிர்க்கும் நம்பிக்கை' உதவி மையத்துக்கு வந்துகொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான அழைப்புகளில் சமீபத்தில் வந்திருக்கும் ஒரு உதவிக்கான அழைப்பு இது. இந்த எளியவர்களை கரை சேர்க்க உதவும் வகையில் எங்களுடன் நீங்கள் இணைய விரும்பினால், 9150734555, 9150737555 என்ற எண்களைத் தொடர்புகொள்ளுங்கள்.

கொரோனா பேரிடரில் உதவி தேவைப்படுவோருக்கு நீங்கள் அளிக்கும் உதவிகளை சரியாக சென்று சேர்வதற்கு உறுதியான அத்தனை பணிகளையும் களத்தில் இருந்து நம் குழுவினர் செய்து வருகிறார்கள்.