டிரெண்டிங்

2ஜி முறைகேடு வழக்கில் தீர்ப்பு தேதி மீண்டும் ஒத்திவைப்பு

2ஜி முறைகேடு வழக்கில் தீர்ப்பு தேதி மீண்டும் ஒத்திவைப்பு

rajakannan

2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் தீர்ப்பு தேதியை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் மீண்டும் ஒத்திவைத்துள்ளது.

2ஜி அலைவரிசை ஏலத்தில் அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக, 2010ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் தேதி சமர்ப்பிக்கப்பட்ட கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து ஏற்பட்ட சர்ச்சைகளால் அப்போது, மத்திய அமைச்சராக இருந்த ராசா தனது பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் 2011 பிப்ரவரி 17ஆம் தேதி ராசா கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். 

இதைத்தொடர்ந்து ஏப்ரல் 2ஆம் தேதி ராசா உள்ளிட்ட 9 பேர் மீது சிபிஐ தனது முதல் குற்றச்சாட்டை பதிவு செய்தது. ஏப்ரல் 25ஆம் தேதி தாக்கலான 2வது குற்றப்பத்திரிகையில் கனிமொழி உள்ளிட்ட 4 பேர் பெயர்கள் இடம் பெற்றன. இந்த விசாரணை டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றன.

இந்த வழக்கில் தீர்ப்பின் தேதி இன்று அறிவிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், தீர்ப்பு தேதி இன்று மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் தீர்ப்பு தேதி டிசம்பர் 5-ல் அறிவிக்கப்படும் என நீதிபதி ஓ.பி.iஷைனி தெரிவித்தார்.