டிரெண்டிங்

கமுதியில் தீயிட்டு அழிக்கப்பட்ட 2500 கிலோ பொட்டாசியம் நைட்ரேட்

கமுதியில் தீயிட்டு அழிக்கப்பட்ட 2500 கிலோ பொட்டாசியம் நைட்ரேட்

kaleelrahman

கமுதி தனி ஆயுதப்படையில் பாதுகாக்கப்பட்டு வந்த 2500 கிலோ பொட்டாசியம் நைட்ரேட் வெடி பொருளை போலீஸார் அழித்தனர்.


ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தனி ஆயுதப்படையில் பாதுகாக்கப்பட்டு வந்த 2500 கிலோ பொட்டாசியம் நைட்ரேட்டை போலீசார தீயிட்டு அழித்தனர். ராமநாதபுரத்திலிருந்து கடல் வழியாக கடந்த 2007 ஆண்டு இலங்கைக்கு கடத்த முயன்ற 2500 கிலோ பொட்டாசியம் நைட்ரேட் எனப்படும் வெடி பொருளை ராமநாதபுரம் கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்து பரமக்குடி நீதி மன்றத்தில் ஒப்படைத்தனர்.


பரமக்குடி நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கின் விசாரனை முடிந்து, ராமநாதபுரம் நீதிமன்றத்தில் நடைபெற்ற மேல் முறையீட்டு வழக்கும் கடந்த மார்ச் மாதம் முடிவடைந்தது. இவ்வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 50 கிலோ எடையுள்ள 50 மூடை (2500கிலோ) பொட்டாசியம் நைட்ரேட் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் கமுதி தனி ஆயுதப்படை வளாகத்தில் வைத்து பாதுகக்கப்பட்டு வந்தது.


கொரோனா நோய் பரவலால் நீதிமன்ற நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதால் வெடி பொருளை அழிக்க நீதி மன்ற உத்தரவிற்காக போலீசார் காத்திருக்கின்றனர். இந்நிலையில் வழக்கு முடிவடைந்ததால் நீதிமன்ற உத்தரவிக்கு பின் சென்னை வெடி பொருள் கண்டறிதல், மற்றும் அழித்தல் குழுவுக்கு தகவல் அளிக்கப்பட்டு பாதுகாப்பான முறையில் வெடி பொருட்களை குண்டாற்று பகுதிக்கு கொண்டு சென்று ஒவ்வொரு மூட்டையாக பிரித்து கொட்டிய போலீசார் பின்பு தீயிட்டு அழித்தனர்.