டிரெண்டிங்

டீக்கடைகளில் சட்டவிரோத மது விற்பனை : பதுங்கிப் பிடித்த தனிப்படை

டீக்கடைகளில் சட்டவிரோத மது விற்பனை : பதுங்கிப் பிடித்த தனிப்படை

webteam

மதுரையில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 23 பேரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.

தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளதால், மதுக்கடைகளுக்கும் நேரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மதுரை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான மேலூர், உசிலம்பட்டி, சோழவந்தான், சிலைமான் ஆகிய இடங்களில் சட்டத்திற்கு புறம்பாக டீக்கடைகள் மற்றும் பொது இடங்களில் மது விற்பனை செய்யப்படுவதாக, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்பிரிவுக்கு புகார் வந்தது.

இதைத்தொடர்ந்து புறநகர் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்ட தனிப்பிரிவு காவல்துறையினர், சட்டத்துக்கு புறம்பாக மது விற்ற 23 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2,172 மது பாட்டில்களை பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களை கைது செய்த போலீஸார், மது விற்பனை தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே கல்லுமேடு பகுதியில் உள்ள குப்பை மேட்டில் பதுக்கி வைத்து மதுபானம் விற்பனை செய்த போஸ் (67) என்ற முதியவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து மதுபான பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.