சென்னை மாநகராட்சியில் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலை விட வாக்குப்பதிவு எட்டு சதவீதம் குறைந்துள்ளது.
150 வார்டுகளை உள்ளடக்கிய சென்னை மாநகராட்சியில், கடந்த 2011ஆம் ஆண்டு கூடுதலாக 50 வார்டுகள் சேர்க்கப்பட்டன. எனவே 200 வார்டுகளுடன் பெருநகர சென்னை மாநகராட்சி என்ற அந்தஸ்தை பெற்றது.
இதனைத்தொடர்ந்து 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாநகராட்சி தேர்தலில் 51புள்ளி 63 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. அப்போதைய வாக்காளர்களின் எண்ணிக்கை 44லட்சத்து 17ஆயிரமாக இருந்தன. தற்போது வாக்காளர்களின் எண்ணிக்கை 61 லட்சமாக உயர்ந்திருந்தாலும், வாக்குப்பதிவு 43புள்ளி 59 சதவீதம் மட்டுமே பதிவாகி இருக்கிறது.