டிரெண்டிங்

காலில் மிதிபட்ட 12 அடி மலைப்பாம்பு : அலறி ஓடிய தேயிலை தொழிலாளி

காலில் மிதிபட்ட 12 அடி மலைப்பாம்பு : அலறி ஓடிய தேயிலை தொழிலாளி

webteam

நீலகிரி மாவட்டம் பந்தலூரில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் காலில் மிதிபட்ட 12 அடி நீளம் மலைப்பாம்பு. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் அதனை பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.

நீலகிரி மாவட்டம் பந்தலூரில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் பல தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று வழக்கம்போல தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்த போது, ஒருவரது காலில் ஏதோ வழுவழுவென வித்தியாசமான ஒன்று மிதிபட்டுள்ளது. உடனே அந்த தொழிலாளர் செடிகளை விலக்கிப் பார்த்துள்ளார்.

அப்போது நீளமான மலைப்பாம்பு ஒன்று சுருண்ட கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த தொழிலாளி, அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்துள்ளார். அவருடன் சேர்ந்த அங்கிருந்த தொழிலாளர்களும் ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து பந்தலூர் வனத்துறையினருக்கு மலைப்பாம்பு குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் தேடிப்பார்த்து மலைப்பாம்பை பிடித்தனர். பின்னர் அதை ஒரு சாக்குப்பையில் போட்டு, பத்திரமாக வனப்பகுதிக்குள் கொண்டு சென்றுவிட்டனர்.