டிரெண்டிங்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை: முன்னிலை நிலவரம் மதியம் 1 மணி வரை

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை: முன்னிலை நிலவரம் மதியம் 1 மணி வரை

நிவேதா ஜெகராஜா

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி தொடங்கி நடைபெற்று வருகின்றது.

இதில் இன்று மதியம் 1 மணி நிலவரப்படி திமுக பெருவாரியாக அனைத்து களத்திலும் முன்னிலையில் உள்ளது. அதன்படி

* மாநகராட்சிகளைப் பொறுத்தவரை, 21 மாநகராட்சிகளில், 21 இடங்களிலுமே திமுக-தான் முன்னிலை உள்ளது. வேறு எந்தக் கட்சியும், எந்த இடத்திலும் முன்னிலையில் இல்லை.

* நகராட்சிகளைப் பொறுத்தவரை, 138 நகராட்சிகளில், 128 இடங்களில் திமுக முன்னிலையில் உள்ளது. அதைத்தொடர்ந்து 6 இடங்களில் அதிமுக இடங்களில், 4 இடங்களில் பிற கட்சிகள் உள்ளன. பாஜக, பாமக, நாதக, மநீம, தேமுதிக மற்றும் அமமுக ஆகிய கட்சிகள் எந்த இடத்திலும் முன்னிலையில் இல்லை.

* பேரூராட்சிகளை பொறுத்தவரை, மொத்தம் 489 பேரூராட்சிகளில் 358 இடங்களில் திமுக முன்னிலையில் உள்ளது. அதைத்தொடர்ந்து 36 இடங்களில் பிற கட்சிகள், 24 இடங்களில் அதிமுக, 3 இடங்களில் பாமக, 2 இடங்களில் பாஜக, 1 இடத்தில் நாதக, 1 இடத்தில் அமமுக வெற்றி பெற்றுள்ளன. மநீம மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகள் எந்த இடத்திலும் முன்னிலையில் இல்லை.

மேலும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்