டிரெண்டிங்

யாசகமாக பெற்ற 1 லட்சத்து 80 ஆயிரம்... அரசு நிவாரண நிதிக்கு வழங்கிய யாசகர்

யாசகமாக பெற்ற 1 லட்சத்து 80 ஆயிரம்... அரசு நிவாரண நிதிக்கு வழங்கிய யாசகர்

kaleelrahman

யாசகம் பெற்ற 10 ஆயிரம் ரூபாய் பணத்தை 18 வது முறையாக கொரோனா நிதியாக வழங்கிய யாசகர்.

தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கிணறு பகுதியை சேர்ந்தவர் பூல்பாண்டியன். இவருக்கு இரு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இவர் தனது குடும்பத்துடன் வாழ்ந்து வந்த நிலையில் மனைவி இறந்த பின்பு பொதுசேவையில் அதிக ஆர்வம் கொண்டு, பல்வேறு பகுதிகளுக்குச் சென்று யாசகம் பெற்று அந்த பணத்தை பள்ளிகள், ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உதவி செய்து வருகிறார். 


இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் மதுரைக்கு வந்துள்ளார். அப்போது கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் அரசு பள்ளியில் தங்கியபடி மதுரையின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று யாசகமாக பெற்ற ரு.10ஆயிரத்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா நிவாரண நிதியாக வழங்கினார்.

இதனைத்தொடர்ந்து இன்று 18வது முறையாக பொதுமக்களிடம் யாசகம் பெற்ற 10ஆயிரம் ரூபாயை கொரோனா நிவாரண நிதியாக மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய்யிடம் வழங்கினார். இவர் ஏற்கனவே யாசகம் பெற்ற பணத்தை புயல் நிவாரண நிதி உள்ளிட்ட பல்வேறு நிவாரண உதவிகளுக்கு வழங்கியுள்ளார்.


யாசகம் பெற்ற பணத்தை அரசுக்கு நிதியாக வழங்கிய பூல்பாண்டியனின் சேவையை அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். இதுவரை 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயை யாசகர் பூல்பாண்டியன் நிதியாக வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.