டிரெண்டிங்

”ப்பா.. இது தோசை இல்லப்பா; சேலட்!!” - வைரலாகும் மெக்சிகன் தோசை; முகம் சுழிக்கும் Foodies

”ப்பா.. இது தோசை இல்லப்பா; சேலட்!!” - வைரலாகும் மெக்சிகன் தோசை; முகம் சுழிக்கும் Foodies

JananiGovindhan

உணவு பிரியர்களை அசத்துவதற்காகவே வழக்கமாக இருக்கும் உணவு பண்டங்களை ஏகப்பட்ட மாற்றுதல்களை செய்து சந்தையில் விற்கும் பழக்கம் அண்மைக்காலமாக தொடர்ந்து அரங்கேறி வருகிறது. அதன்படி சமோசாவில் குலோப் ஜாமுன் வைப்பது, காரணமான பண்டங்களை இனிப்புடன் இணைத்து புது வரவு எனச் சொல்லி வியாபாரம் செய்வது என பல நூதனமான பண்டங்கள் குறித்த வீடியோக்களும் பதிவுகள் தொடர்ந்து சமூக வலைதளங்கள் வாயிலாக காணக்கிடைக்கின்றன.

முதல் அவை எப்படிதான் இருக்கும் என ஆவலாக போய் வாங்கி சாப்பிட்ட ஃபுட்டீஸ்களே முகம் சுழிக்கும் வகையில்தான் இருக்கிறது என்பதும் அதே வீடியோக்கள் மூலம் தெரியப்படுத்தியிருக்கும். இப்படி இருக்கையில், தோசைகளில் பற்பல வகைகள் இருந்தாலும் மெக்சிகன் தோசை குறித்த வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராம் தளத்தில் வைரலாகி வருகிறது.

பொதுவாக மசாலா தோசையில் உருளைக் கிழங்கை மசாலாவாக வைத்து கொடுப்பார்கள். ஆனால் இந்த வகை மெக்சிகன் தோசையில் வெறும் வெங்காயம், குடமிளகாய், தக்காளிகளை மட்டும் நறுக்கிப் போட்டு பச்சையாக வைத்திருக்கிறார்கள்.

இதனைக் கண்ட நெட்டிசன்கள் பலரும் “இது தோசையா இல்ல காய்கறிகள் எல்லாம் ஸ்டஃப் செய்யப்பட்ட வெறும் சாலடா?” எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். மேலும் “இதுல மெக்சிகன் தோசைனு சொல்லும் அளவுக்கு எதுவுமே இல்லை” என்றும் கமெண்ட் செய்திருக்கிறார்கள்.