டிரெண்டிங்

”முடி வேண்டாம்” - புற்றுநோயாளிகளுக்கு முடியை தானமாக வழங்கிய மாடல்

”முடி வேண்டாம்” - புற்றுநோயாளிகளுக்கு முடியை தானமாக வழங்கிய மாடல்

PT

மதுரையில் ஆடை வடிவமைப்பு மற்றும் மாடலிங் செய்து வரும் பெண் ஒருவர் தனது முடியை புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு தானமாக வழங்கி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.


மதுரை கிழக்கு மாசி வீதிப் பகுதியைச் சேர்ந்த மகாலட்சுமி என்ற இளம் பெண் ஆடை வடிவமைப்பு மற்றும் மாடலிங் செய்து வருகிறார். பணி நிமித்தமாக சென்னை சென்றபோது 3 வயது சிறுமி ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்ததை கண்டு மனம் உடைந்த மகாலட்சுமி, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தம்மால் இயன்ற சேவையை செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டுள்ளார். அந்தவகையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது முடியை தானமாக வழங்கி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். 

பொதுவாக மாடலிங் துறையில் இருப்பவர்கள் கூந்தல் அழகை  சற்றும் குறையாமல் பராமரிப்பு செய்து பாதுகாத்து வரும் நிலையில், அதையெல்லாம் பற்றி சற்றும் யோசிக்காமல் தனது முடியை நோயாளிகளுக்கு தானமாக வழங்கிய மகாலட்சுமியின் மனிதாபிமானத்தை  பொதுமக்கள் சிலர் பாராட்டி வருகின்றனர்.