டிரெண்டிங்

நான் அரசியலில் இருக்க வேண்டுமென முதலில் சொன்னவர் ‘நெல்சன் அங்கிள்’ - பிரியங்கா

நான் அரசியலில் இருக்க வேண்டுமென முதலில் சொன்னவர் ‘நெல்சன் அங்கிள்’ - பிரியங்கா

rajakannan

தான் அரசியலில் இருக்க வேண்டுமென எல்லோருக்கும் முன்பாக சொன்னவர் மறைந்த தலைவர் நெல்சன் மண்டேலா என்று பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.

உலகம் முழுவதும் நெல்சன் மண்டேலாவின் 101 ஆவது பிறந்ததினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. ராகுல் காந்தியின் சகோதரியும், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி தன்னுடைய ட்விட்டரில் நெல்சன் மண்டேலாவை புகழ்ந்து ஒரு பதிவிட்டுள்ளார். 

அந்த பதிவில், “நெல்சன் மண்டேலா போன்ற தலைவரை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது உலகம் இழந்துவாடுகிறது. அவரது வாழ்க்கை உண்மை, அன்பு மற்றும் சுதந்திரம் ஆகியவற்றிற்கு சாட்சியாக இருக்கிறார். என்னைப் பொறுத்தவரை அவர் ‘அங்கிள் நெல்சன்’. எல்லோருக்கும் முன்பாக நான் அரசியலில் இருக்க வேண்டும் என என்னிடம் கூறினார். அவர் எப்போதும் எனக்கு உந்து சக்தியாகவும், வழிகாட்டியாகவும் இருப்பார்” என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நெல்சன் மண்டேலாவுடன் உள்ள படத்தையும் பிரியங்கா பதிவிட்டுள்ளார். பிரியங்கா காந்தி கடந்த ஜனவரி மாதம் உத்தரப்பிரதேச கிழக்கு பகுதியில்  காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். நாடாளுமன்ற தேர்தலிலும் உத்தரப் பிரதேசத்தில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். ஆனால், காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது.