டெக்

ஹேக் செய்யப்பட்டது Zomato: 1 கோடியே 70 லட்சம் கணக்குகள் திருட்டு!

ஹேக் செய்யப்பட்டது Zomato: 1 கோடியே 70 லட்சம் கணக்குகள் திருட்டு!

Rasus

ஆன்லைனில் உணவு விற்பனை செய்யும் நிறுவனமான Zomato -வின் இணையதளம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டது.

இணையம் மூலம் உணவு டெலிவரி செய்யும் Zomato நிறுவனம் இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளின் இணையதள சந்தைகளில் இயங்கி வருகிறது. தற்போது Zomato-வின் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 1 கோடியே 70 லட்சம் Zomato வாடிக்கையாளர்களின் கணக்குகள் மற்றும் கடவுச்சொற்கள் திருடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள இந்நிறுவனம், வாடிக்கையாளர்களின் பணப்பரிவர்த்தனைக்கான தகவல்கள் எதுவும் ஹேக் செய்யப்படவில்லை என்றும், அவை அனைத்தும் பாதுகாப்பாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளது. மேலும், ஹேக் செய்யப்பட்ட வாடிக்கையாளர்கள் தங்களது இமெயில் கடவுச்சொற்களைப் புதிதாக மாற்றிக்கொள்ளும்படி Zomato நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. ஹேக் செய்யப்பட்ட கணக்குகளை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இது 2 நாட்களில் சரி செய்யப்பட்டுவிடும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, கடந்த 2015 ஆம் ஆண்டு வொயிட் ஹேட் என்ற ஹேக்கர் மூலம் Zomato ஹேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.