டெக்

புதிய சாதனையை நோக்கி செல்லும் விண்டோஸ் 10

புதிய சாதனையை நோக்கி செல்லும் விண்டோஸ் 10

webteam

விண்டோஸ் 10 ஓஎஸ், 600 மில்லியனுக்கும் அதிகமான சாதனங்களில் இயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் தலைசிறந்த மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட் நிர்வாகத்தின் மாதந்திர குழு கூட்டம் நடைபெற்றது. இதன் தலைமை நிர்வாக அதிகாரி சத்திய நதெல்லா விண்டோஸ் -10 குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் விண்டோஸ்10 கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்த 270 மில்லியன் பயனர் தளத்தைவிட தற்போது கணிசமாக எண்ணிக்கையில் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். இருப்பினும் அந்நிறுவனத்தின் முக்கிய குறிக்கோளான ஒரு பில்லியன் இலக்கை இன்னும் அடையவில்லை என்றும் கூறினார். மேலும் இந்த இலக்கை அடைய கடுமையாக உழைக்க வேண்டும் என்று சத்திய நதெல்லா தெரிவித்தார்.  

கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற மைக்ரோசாப்ட்டின் வருடாந்திர கூட்டத்தில், விண்டோஸ்10 இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குள் ஒரு பில்லியன் பயனாளர்களை எட்ட முடியவில்லை என்று தெரிவித்திருந்தது. ஆனால் சில மாதங்கள் கழித்து வெளியான விண்டோஸ்10 இன் அசல் வெளியீட்டிற்குப் பிறகு மைக்ரோசாப்ட் நிறுவனம் 50 மில்லியன் பயனர்களை சென்றடைந்துள்ளது. இந்நிலையில் இதன் தரத்தை மேலும் உயர்த்தி அதிகப்படியான பயனாளர்களை அழைத்து வரும் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது விண்டோஸ் -10 ஓஎஸ், டெஸ்க்டாப், லேப்டாப், டேப்லெட்ஸ், ஹெட்செட்ஸ் உட்பட 600 மில்லியனுக்கும் அதிகமான செயல்பாட்டு சாதனங்களில் இயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.