டெக்

விண்டோஸ் 10ல் இண்டர்நெட் பிரச்னை: ஒப்புக்கொண்ட மைக்ரோசாஃப்ட்!!

விண்டோஸ் 10ல் இண்டர்நெட் பிரச்னை: ஒப்புக்கொண்ட மைக்ரோசாஃப்ட்!!

webteam

விண்டோஸ் 10ல் காணப்படும் சிறு பிழை காரணமாக கம்ப்யூட்டர்களில் இணையதள இணைப்பு பாதிக்கப்படும் என கண்டறியப்பட்டுள்ளது. முதலாவதாக கணினியில் ஒரு மஞ்சள் முக்கோணத்தை பயனர்கள் அடையாளம் கண்டனர். இது கணினிக்கு இணைய வசதியில்லை என்பதைக் குறிக்கிறது.  ரூட்டருடன் கருவி சரியாக இணைக்கப்படும்போது இந்தப் பிழை கண்டறியப்பட்டது.

இந்த எச்சரிக்கை இருந்தபோதிலும், பயனர்கள், தங்கள் பிரவுசர்கள் மூலம் ஆன்லைனில் செல்லமுடியும். மைக்ரோசாப்ட் விண்டோஸ் 10க்கான சில பிழைத் திருத்தங்களை மே 2020 புதுப்பிக்கும் பணியின் வழியாகச் சேர்த்திருக்கலாம், ஆனால் சரி செய்யப்படாத மென்பொருளைப் பாதிக்கும் மற்றொரு சிக்கல் இருப்பதாகத் தெரிகிறது. இறுதியாக மைக்ரோசாஃப்ட் இந்தப் பிரச்சினை இருப்பதை ஒப்புக்கொண்டுள்ளது.

விண்டோஸ் 10 அப்டேட், பிழைகள் மற்றும் பாதுகாப்புச் சிக்கல்களால் பிரச்சினையாகிவிட்டது. பின்தொடர்தல் மற்றும் பாதுகாப்பு இணைப்புகள் மூலம் அவற்றைக் மைக்ரோசாப்ட் கையாண்டுவருகிறது. விண்டோஸ் அறிக்கையின்படி, விண்டோஸ் 10, 2004 பதிப்பு, சில கம்ப்யூட்டர்களுக்கு தவறான இணைய இணைப்பு எச்சரிக்கைகளைக் காட்டுகிறது என்பதை மைக்ரோசாப்ட் ஏற்றுக்கொண்டது.

இதுதொடர்பான ஆய்வில் ஈடுபட்டுள்ள மைக்ரோசாப்ட், குறைபாடுகளை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது.