பூமியை கடக்கும் சிறுகோள் கோப்புப்படம்
டெக்

பூமியை நெருங்கும் 3 சிறுகோள்கள்... மனிதர்களுக்கு ஆபத்தா? விஞ்ஞானிகள் கூறுவதென்ன?

Jayashree A

விண்வெளியில் சுற்றித்திரியும் சிறுகோள்கள் பற்றிய ஆய்வில் நாசா தீவிரமாக இறங்கியுள்ளது. அதாவது பூமியை தாக்கக்கூடிய விண்கல் ஏதாவது விண்ணில் இருக்கிறதா... அதன் ஆபத்து என்ன, அதனை தடுக்கும் வழிமுறை என்ன என்பதை ஆராய்ந்து வருகிறார்கள் நாசா விஞ்ஞானிகள்.

இவர்கள், ஒரு விண்கல் பூமியை தாக்க இருப்பது தெரிந்தால், முன்னேற்பாடாக அதன் பாதையை மாற்ற முயல்வார்கள். முடியாவிட்டால் ராக்கெட்டின் உதவியால் அதை தகர்த்தெரியவும் தயாராக இருப்பார்கள். இதன்மூலம் விண்கற்களால் பூமிக்கு எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படாமல் பாதுகாப்பார்கள் விஞ்ஞானிகள். இந்த விஞ்ஞானிகள், சமீபத்தில் ஒரு விஷயத்தை கூறியுள்ளனர்.

அதன்படி நாளை பூமிக்கு அருகில் விண்ணில் இரு சிறுகோள்கள் வரவுள்ளன. இவை பூமியை கடந்து செல்லும். அப்படி கடந்து செல்கையில், அவற்றினால் பூமிக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படுமா என்பது குறித்துதான் நாசா விஞ்ஞானிகள் பேசியுள்ளனர். என்ன சொன்னார்கள் அவர்கள்? இங்கே தெரிந்துக் கொள்ளலாம்...

ஒரு சிறுகோள் பூமியை தாக்கினால் அதன் வேகத்தைப் பொருத்துதான் அதன் தாக்கமானது இருக்கும். உதாரணத்துக்கு ஒரு சிரு கல்லை மெதுவாக தரையில் போட்டால் பாதிப்பு இருக்காது. ஆனால் அதே சமயத்தில் அந்த கல்லை தூரத்திலிருந்து வேகமாக எரியும்பொழுது அதன் தாக்கமானது அதிகரிக்கும். இதே வழிமுறைதான் சிறுகோள்களுக்கும்.

சரி, இப்போது பூமியை கடக்க உள்ள 3 சிறுகோள்கள் பற்றியும் பார்க்கலாம்...

1) சிறுகோள் 2024 NS1

நாளை (ஆகஸ்ட் 2ம் தேதி) 46 மீட்டர் அகலம் கொண்ட 2024 NS1 என்று பெயரிடப்பட்ட சிறுகோள் ஒன்று பூமியை நெருங்குகிறது. இது 150 அடி (46 மீ) விட்டம் கொண்டது. பூமியிலிருந்து 1.26 மில்லியன் மைல் தூரத்தில் இது இருக்கிறது. அதாவது இது பூமியிலிருந்து சந்திரனுக்கான தூரத்தை விட 5 மடங்கு அதிகம். ஆனாலும் இதை பூமிக்கு அருகில் என்றே சொல்கிறோம். இது பூமிக்கு அருகே இது வந்தாலும்கூட, இந்த சிறுகோளால் பூமிக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என்று கூறப்படுகிறது.

சிறுகோள் 2020 PN1

சிறுகோள் 2020 PN1 சுமார் 90 அடி (27 மீ) விட்டம் கொண்டது. இதுவும் நாளை (ஆகஸ்ட் 2, 2024) அன்று பூமியைக் கடந்து செல்ல உள்ளது. இந்த சிறுகோளின் பாதை பூமிக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது. இது பூமியிலிருந்து 4.28 மில்லியன் மைல்களுக்குள் (6.29 மில்லியன் கிமீ) வருகிறது. இது சந்திரனின் தூரத்தை விட கிட்டத்தட்ட 18 மடங்கு அதிகம்.

இந்த இரண்டு சிறு கோள்களை தவிர, மற்றொரு சிறுகோள் ஒன்று ஆகஸ்ட் 4ம் தேதி பூமியை கடக்கவுள்ளது.

2024 ஓசி

அந்த சிறுகோள், 2024 OC. இது ஆகஸ்ட் 4, 2024 அன்று பூமியை நோக்கி வருகிறது. இந்த சிறுகோள் தோராயமாக 410 அடி (125 மீ) விட்டம் கொண்டது மற்றும் நமது கிரகத்தில் இருந்து 4.61 மில்லியன் மைல்கள் (7.42 மில்லியன் கிமீ) தொலைவில் இருக்கிறது. இந்த தூரம் பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான தூரத்தை விட 19 மடங்கு அதிகம்.

இந்த மூன்றும் பூமியை விரைவில் நெருங்க உள்ளது. ஆனால் இதனால் எவ்வித ஆபத்துமில்லை என்று நாசா விஞ்ஞானிகள் கூறுகின்றனர். காரணம், இவை பெரும்பாலும் பூமியை கடக்கிறதே தவிர பூமிக்குள் வருவதில்லை.