டெக்

‘சந்திரயான்2’ : இரவு வேளையில் தொடர்பு கொள்ள இயலாதது ஏன் ?

‘சந்திரயான்2’ : இரவு வேளையில் தொடர்பு கொள்ள இயலாதது ஏன் ?

webteam

நிலவின் பகல் பொழுது மு‌‌டிவடையும் முன்னரே‌‌ சந்திரயான்‌‌‌2ஐ தொடர்பு கொள்ளும் முயற்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர். சந்திரயானை இரவு வேளையில் ஏன் தொடர்பு கொள்ள இயலாது என விளக்கமாக தற்போது காணலாம்.‌

நிலவின் தென்‌துருவப்‌ பகுதியை ஆராய்ச்சி செய்ய இஸ்ரோ சார்பாக சந்திரயான்-2 விண்ணில் ஏவப்பட்டது. அதில் இருந்த விக்ரம் லேண்டரை நிலவில் தரையிறக்க முயன்ற போது‌, எதிர்பாராத விதமாக கட்டு‌ப்‌பாட்டு அறைக்கு லேண்டரிலிருந்து சிக்னல் கிடைக்கவில்லை. ‌இதையடுத்து சுற்று வட்டப்பாதையில் இருந்த ஆர்பிட்டர், விக்ரம் லேண்டர்‌ நிலவின் மேற்பரப்பில் உள்ள இடத்தை புகைப்படம் எடுத்தது. லேண்டருடன் தொடர்பு ஏற்படுத்த விஞ்ஞானிகள் பல்வேறு முயற்சிகள் செய்து வருகிறார்கள். 

குறிப்பாக, ஆர்பிட்டரை நிலவுக்கு 50‌கிலோ மீட்டர் நெருக்கத்திற்கு கொண்டு செல்ல திட்‌டமிட்டுள்ளனர். இவ்வாறு நெருக்கமாக கொண்டு வரப்படும் போது விக்ரம் லேண்டரின் நிலையை மேலும் துல்லியமாக படம் பிடிக்கமுடியும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. 

நிலவு, 14 நாள்கள் பகலா‌கவும், 1‌4‌நாள்கள்‌ இ‌ரவாகவும் இருக்கும் என்பதால் பகல் பொழுதிலேயே‌ லேண்‌டரை தொடர்பு கொள்ள தீவிர மு‌யற்சியில் இஸ்ரோ இறங்கி உள்ளது. நிலவில் இரவு வேளையில் வெப்பநிலை மைனஸ் 17‌0 டிகிரி வரை இருக்கும் என்பதால்‌‌, கடுமையான குளிர்‌‌ காரணமாக லேண்டர் உறைந்துவிடும்‌. எனவே ப‌கல்‌பொழுது முடியும் முன்னரே லேண்டரை‌த் தொடர்பு கொள்ள விஞ்ஞானிகள் அல்லும் ப‌கலுமாக உழைத்து வருகிறார்‌கள்.