WhatsApp புதிய அப்டேட் @WhatsApp
டெக்

இனி WhatsApp-ல் மென்ஷன் செய்யலாம்... விரைவில் வருகிறது புதிய அப்டேட்..!

இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒருவரை மென்ஷன் செய்வது போல , வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸிலும் விருப்பமானவரை மென்ஷன் செய்யும் வசதியை மெட்டா நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒருவரை மென்ஷன் செய்வது போல, வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸிலும் விருப்பமானவரை மென்ஷன் செய்யும் வசதியை மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமூக ஊடங்களின் பயன்பாடு என்பது இந்த 21 ஆம் நூற்றாண்டில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. சமூக ஊடகமான வாட்ஸ்-அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், X வலைதளம் போன்றவைகளை மக்கள் அதிகமாக பயன்படுத்துவதற்கு முக்கியமான ஒரு காரணம், அதில் வரும் புது புது அப்பேட்கள்தான்.

WhatsApp

ஆரம்ப காலத்தில் வெறும் குறுஞ்செய்திகளை அனுப்பும் நடைமுறை மட்டுமே இருந்த நிலையில் தற்போது வீடியோ கால், வாய்ஸ் மெசேஜ், லைவ் லொகேசன் போன்ற அப்டேட்கள் எல்லா ஊடகத்திலும் வந்துள்ளன. இந்தவகையில் சமீபகாலமாக, பயனர்களின் அனுபவத்தினை மேம்படுத்தவும், அதன் மூலம் தங்களின் வருவாயை பெருக்கி கொள்ளவும் மெட்டா போன்ற நிறுவனங்கள் பல க்ரியெட்டிவான விஷயங்களை செய்து வருகிறது.

இதனடிப்படையில், வாட்ஸ்-அப்பிலும் தற்போது புது புது சிறப்பம்சங்கள் வந்து கொண்டு இருக்கிறது. உதாரணத்துக்கு Profile புகைப்படத்தை தங்களுக்கு பிடித்தவர்களுக்கு மட்டும் காண்பிப்பது, அழைப்பு எண்ணை சேவ் செய்யாமலேயே ஒருவருக்கு மெசேஜ் செய்வது, ஆண்ட்ராய்டு மொபைலில் இரு வாட்ஸ்-அப் அக்கௌண்ட்களை லாக்-இன் செய்துகொள்வது என்று பல புது அமசங்களை சொல்லலாம். இப்படி அப்டேட்களை அள்ளித்தரும் வாட்ஸ்-அப்பின் மெட்டா நிறுவனம் தற்போது இன்ஸ்டாகிராம் போல ஸ்டேட்டஸில் டேக் செய்யும் வசதியையும் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒருவரை நாம் மென்ஷன் செய்வது போல, வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸிலும் நமக்கு விருப்பமானவர்களை மென்ஷன் செய்து கொள்ளலாம்.

இப்படி மென்ஷன் செய்யும் போது, மென்ஷன் செய்யும் அக்குறிப்பிட்ட நபருக்கு அடுத்த நொடியே Notification செல்லும். இந்த வசதி நடைமுறைக்கு வந்தால் ஸ்டேட்டஸ் பகுதியின் மூலம் இதனை நடைமுறைப்படுத்தி கொள்ளலாம் என தெரிகிறது. அதேநேரம் இது தொடர்பான privacy விதிகள் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

அப்டேட்களை அள்ளி தரும் வாட்ஸ்-அப்பின் இந்த புதிய அப்பேட் எப்பொழுது வெளியாகும் என பயனர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர். இன்ஸ்டாகிராம் உபயோகிக்காத பயனர்களும்கூட இந்த வசதியை பெரிதும் வரவேற்பர்..!