டெக்

வாட்ஸ்அப்-ல் பைல்கள் அனுப்ப புதிய வசதிகள் அறிமுகம்

வாட்ஸ்அப்-ல் பைல்கள் அனுப்ப புதிய வசதிகள் அறிமுகம்

webteam

வாட்ஸ்அப் ஃபைல்கள் அனுப்புவதில் முக்கியமான வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

வாட்ஸ்அப் இரண்டு முக்கியமான புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இனி எந்தவிதமான ஃபைல்களையும் உரையாடல் பக்கத்திலேயே நண்பர்களுக்கு அனுப்ப முடியும். இதற்கு முன்னர் பிடிஎஃப் ஃபைலை மட்டுமே அனுப்ப முடியும். புதிய வசதியில் 100 எம்பி வரை கோப்புகளை அனுப்ப முடியும்.

மேலும் முக்கியமான நண்பர்கள் மற்றும் குரூப்-ன் சேட்களை முதலில் ’பின்’(pin) செய்து கொள்ளலாம். சேட்-ஐ ’பின்’செய்வதற்கு வாட்ஸ்அப் செயலியின் திரையை வலது புறமாக நகர்த்தினால் ’பின்’ ஐகான் வரும். அதை கிளிக் செய்து ’பின்’ வசதியை செயல்படுத்திக் கொள்ளலாம். நமக்கு வந்த பல படங்களை ஒரே நேரத்தில் பல குரூப் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பலாம் அல்லது டெலீட் செய்யலாம். இந்த வசதியை ஐஓஎஸ் இயங்குதளத்திற்கும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் நாம் அனுப்பிய செய்திகள், படங்கள் என அனைத்து விதமான ஃபைல்-களையும் அனுப்பிய 5 நிமிடங்களுக்குள் டெலீட் செய்யக் கூடிய ‘ரிகால்’ வசதியையும் சமீபத்தில் வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.