Whatsapp PT
டெக்

இனி என்ன ரியாக்சன் கொடுக்கலாமென தேடிக்கொண்டிருக்க வேண்டாம்.. வருகிறது WhatsApp-ன் புதிய அப்டேட்❤️

இனி சாட் செய்யும் போது விரைவாகவே மெசேஜ்களுக்கு ரியாக்சன் கொடுக்கும் விதமாக, டபுள் டேப் ரியாக்ஷன் அம்சத்தை அறிமுகப்படுத்த உள்ளது வாட்ஸ்அப் நிறுவனம்.

Rishan Vengai

தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ்அப் தொடர்ந்து தனது வாடிக்கையாளர்களை புதிய புதிய அம்சங்கள் மூலம் ஈர்த்து வருகின்றது. அந்த வரிசையில் சமீபத்தில்கூட ‘பிடித்தமானவர்களின் ஸ்டேட்டஸை ரீஷேர் செய்துகொள்ளும் அம்சத்தையும், பிடித்தவர்களை மென்ஷன் செய்து ஸ்டேட்டஸ் வைக்கும் அம்சத்தையும் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளோம்’ என அறிவித்தது.

இப்படியாக வாட்ஸ்அப் பயனாளர்களின் சின்ன சின்ன விருப்பங்களுக்கு கூட முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் செயல்பட்டு வரும் மெட்டா, தற்போது தங்களின் பயனர்கள் விரைவாக மற்றும் ஜாலியான அரட்டையை மேற்கொள்ளும் வகையில் லவ் ரியாக்ட் முதலிய எமோஜி ரியாக்சன் செய்வதை விரைவாகவே செய்யும் வகையில் டபுள்-டேப் ரியாக்சன் என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தவிருக்கிறது.

அது என்ன டபுள்-டேப் ரியாக்சன் அப்டேட்?

தற்போது, ​​வாட்ஸ்அப் சாட்டில் ஒரு மெசேஜ்ஜுக்கு ரியாக்சன் கொடுக்க வேண்டுமென்றால், அந்த மெசேஜ்ஜை ஹோல்ட் செய்து பின்னர் ஹார்ட் அல்லது விருப்ப ரியாக்சனை கொடுக்க வேண்டியதாக இருக்கிறது. இது கொஞ்சம் மெதுவாக இருக்கிறது இல்லையா(!)? இதைமாற்றும் விதத்தில்தான் மெசேஜ்ஜை இரண்டுமுறை தட்டினால் இதய ரியாக்ட் கொடுக்கும் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு வாட்ஸ்அப் செயல்பட்டு வருகிறது. இது தற்போது இன்ஸ்டாவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

double tap reaction update

இந்த புதிய அம்சத்தில்,

டபுள்-டாப் ரியாக்சன்: இந்த புதிய அம்சம் அறிமுகமானதும், ஒரு செய்தியை இருமுறை தட்டுவதன் மூலம் நீங்கள் விரைவாக பதிலளிக்க முடியும்.

டீஃபால்ட் ஹார்ட் ரியாக்சன்: இந்த புதிய அம்சத்தில் நீங்கள் இருமுறை தட்டும்போது WhatsApp தானாகவே இதய ஈமோஜியைக் காட்டும், ஆனால் நீங்கள் மற்ற எமோஜிகளை தேர்ந்தெடுக்க விரும்பினாலும் பழைய ஹோல்ட் செய்து தேர்வு செய்யும் முறையில் மாற்றிக்கொள்ளலாம்.

எப்போது இந்த அம்சம் அறிமுகப்படுத்தப்படும்?

டபுள் டேப் ரியாக்சன் அம்சமானது நேரடியாக ஆண்ட்ராய்ட் பயன்பாட்டாளர்கள் பயன்படுத்தும் விதமாகவே அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ஆனால் எப்போது அறிமுகப்படுத்தப்படும் என்ற விவரங்களை இன்னும் வாட்ஸ்அப் உறுதிப்படுத்தவில்லை.