வாட்ஸ் அப் நிறுவனம் ரீட் மற்றும் மியூட் பட்டன் ஆப்ஷன்களில் புதிய அப்டேட்டை கொண்டு வரவுள்ளது.
உலகம் முழுவதும் தற்போதைய காலகட்டத்தில் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை பெரும்பாலானோரின் பொழுதுபோக்காக சமூக வலைத்தளங்கள் மாறிவிட்டன. குறிப்பாக ஃபேஸ்புக், வாட்ஸ் அப், ட்விட்டர் போன்றவை உலக அளவில் அதிக பயன்பாட்டாளர்களை கொண்டுள்ளன. இந்தியாவில் ஸ்மார்ட்போன் வைத்துள்ளவர்கள் அனைவருமே வாட்ஸ் அப் பயன்பாட்டாளர்களாக உள்ளனர் எனக் கூறலாம். ஏனெனில் அந்த அளவிற்கு இந்தியாவில் வாட்ஸ் அப் ஆதிக்கம் செலுத்துகின்றது.
வாட்ஸ் அப் கண்டுபிடிக்கப்பட்டது 2009ஆம் ஆண்டு. ஜான் கோம் மற்றும் ப்ரைன் அக்டான் என்ற இரு அமெரிக்கர்கள் இணைந்து வாட்ஸ் அப்பை கண்டுபிடித்தனர். இதன் தலைமை அலுவலகம் கலிபோர்னியாவில் அமைந்துள்ளது. ஆண்டாராய்ட், ஐபோன், விண்டோவ்ஸ் போன் உட்பட அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் வாட்ஸ் அப்பை பயன்படுத்த முடியும். சில நாடுகளில் மட்டும் இந்தச் செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ் அப்பை 2014 பிப்ரவரி மாதம் ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கியது. அதன்பிறகு வாட்ஸ் அப்பில் பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. அதன்பிறகு தொடர்ச்சியாக பயன்பாட்டாளர்களின் வசதிக்கேற்ப பல அப்டேட்கள் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மேசெஜ்களை படிப்பது மற்றும் மியூட் பட்டன்கள் ஆப்ஷனில் வாட்ஸ் அப் புதிய அப்டேட்களை மேற்கொண்டுள்ளது. இந்தப் புதிய அப்டேட்டின் மூலம், நீங்கள் மெசேஜை வாட்ஸ் அப்பை ஓபன் செய்யாமல், நோட்டிஃபிகேஷன்களில் பார்த்துவிட்டே மார்க் அஸ் ரீட் (Mark as Read) செய்யலாம். தற்போது உள்ள அப்பேட்டின் படி, வாடிக்கையாளர்கள் வாட்ஸ் அப்பை ஓபன் செய்யாமலே மெசெஜ்க்கு ரிப்ளே செய்யும் ஆப்ஷனை டிஸ்ப்ளேவில் பயன்படுத்த முடியும். ஆனால் தற்போது வரவுள்ள புதிய அப்டேட்டில் ரீட் செய்யவும் முடியும். இதேபோன்று வாட்ஸ் அப்பின் ஆப்ஷன்களுக்குள் சென்று தேவையான குரூப்-ஐ மியூட் பட்டனை பயன்படுத்தி மியூட் செய்யலாம். ஆனால் புதிதாக வரவுள்ள அப்டேட் மூலம் நோட்டிஃபிகேஷனை பார்க்கும் போதே, மியூட் செய்யலாம். இந்த இரண்டு தற்போது பீட்டா யூசர்களின் பயன்பாட்டில் உள்ளது. விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது.