டெக்

பிளாக்பெரி.... நோக்கியாவுக்கு கருணை காட்டிய வாட்ஸ்அப்

பிளாக்பெரி.... நோக்கியாவுக்கு கருணை காட்டிய வாட்ஸ்அப்

webteam

பிளாக்பெரி ஓஎஸ் மற்றும் நோக்கியா எஸ் 40 பிளாட்பார்ம்களில் ஜூலை 1 முதல் வாட்ஸ் அப் இயங்காது என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது காலக்கெடுவை நீட்டித்து வாட்ஸ் அப் கருணை காட்டியுள்ளது.

கடந்த வருடம், ஃபிப்ரவரி மாதம் ப்ளாக்பெரி ஓஎஸ், ப்ளாக்பெரி 10, நோக்கியா எஸ்40, நோக்கியா சிம்பியன் எஸ்60 ப்ளாட்ஃபார்ம்களுக்கான ஆதரவை முடித்து கொள்வதாக வாட்சப் நிறுவனம் அறிவித்தது. எனினும்ப்ளாக்பெரி ஓஎஸ் மற்றும் நோக்கியா எஸ்40, இந்த வருடம் ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. அதன்படி வரும் 30ம் தேதிக்குப் பிறகு அந்த போன்களில் வாட்ஸ் அப் இயங்காது என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், வாட்ஸ் அப்பை தன்னுடன் இணைத்துக்கொண்ட ஃபேஸ்புக் நிறுவனம், ப்ளாக்பெரி ஓஎஸ்ஸுக்கு டிசம்பர் 2017 வரையும், நோக்கியா எஸ்40 இயங்குதளத்திற்கு டிசம்பர் 2018 வரையிலும் வாட்ஸ் அப் ஆதரவு காலத்தை நீட்டித்திருக்கிறது.

ப்ளாட்ஃபார்மும், காலக்கெடுவும்:-

1. ஜூன் மாதம் 30-ஆம் தேதிக்கு பின்பு, நோக்கியா சிம்பியன் எஸ்60 வாட்ஸ் அப் இயங்காது.

2. டிசம்பர் 31, 2017 வரை, ப்ளாக்பெரி ஓஎஸ், ப்ளாக்பெரி 10, விண்டோஸ் ஃபோன் 8.0 மற்றும் பழைய ப்ளாட்ஃபார்ம்களில் இயங்கும்.

3. டிசம்பர் 31, 2018 வரை, நோக்கியா எஸ்40-யில் வாட்ஸ் அப் இயங்கும்.

4. ஃபிப்ரவரி 2010 வரை, ஆண்ட்ராய்ட் வெர்ஷன் 2.3.7 மற்றும் பழைய வெர்ஷன்களில் வாட்ஸ் அப் தொடர்ந்து இயங்கும்.

உலகம் முழுவதும் 1.2 பில்லியன் மக்களால் வாட்சப் பயன்படுத்தப்படுகிறது. அதில் இந்தியாவில், வாட்ஸ் அப் பயனாளர்களின் எண்ணிக்கை மட்டும் 200 மில்லியன். வாடிக்கையாளர்களை தக்கவைத்துக்கொள்ளும் பொருட்டு, வாட்ஸ் அப் ஆதரவு காலக்கெடுவை நீட்டித்திருக்கிறது.