டெக்

"வாட்ஸ்அப் பே" மூலம் தரவுகள் திருடப்படலாம்: எச்சரிக்கும் வல்லுநர்கள்..!

jagadeesh

வாட்ஸ்அப் மூலம் பணம் செலுத்தும் வசதியை துல்லியமாக ஆய்வு செய்ய வேண்டும் என நாட்டின் தலைசிறந்த இணைய சட்ட வல்லுநர்களில் ஒருவரான பவன் துக்கல் தெரிவித்துள்ளார்.

இந்தியாவை சேர்ந்த பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் வாட்ஸ் அப் செயல்பாடுகளை இஸ்ரேலை சேர்ந்த NSO நிறுவனம் உளவு பார்த்ததாக வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்திருந்தது‌‌. இதையடுத்து வாட்ஸ் தகவல்கள் உளவு பார்க்கப்பட்ட விவகாரம் குறித்து விசாரிக்க 2 நாடாளுமன்ற குழுக்களை மத்திய அரசு நியமித்தது. இந்நிலையில் வாட்ஸ் அப் அறிமுகப்படுத்தியுள்ள பணபரிவர்த்தன வசதியான "வாட்ஸ் பே"ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என இணைய சட்ட வல்லுநர் பவன் துக்கல் எச்சரித்துள்ளார். 

இதனை துல்லியமாக கண்காணிக்க வேண்டும் எனக் கூறியுள்ள அவர், பண பரிமாற்றத்தின்போது பயனர்கள் தனிப்பட்ட தகவல்களை வழங்க நேரிடும் என்றும், இது இணைய பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்றும் தெரிவித்துள்ளார். இந்தியாவில் சோதனையில் உள்ள பீட்டா பதிப்பில் மட்டுமே "வாட்ஸ்பே" வசதி அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.