வாட்ஸ்அப் செயலியானது தொடர்ந்து தங்களுடைய வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் புதிய அப்டேட்களை அறிமுகப்படுத்தி வருகின்றது. அந்த வரிசையில் பயனர்கள் Meta AI உடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறார்கள் என்பதில் பெரும் மாற்றத்தை கொண்டு வரும் புதிய அம்சத்தை வெளியிட WhatsApp தயாராகி வருகிறது.
WABetaInfo-ன் சமீபத்திய அறிக்கையின்படி, WhatsApp ஆனது வாய்ஸ் சாட் பயன்முறையை உருவாக்குகிறது, இது பயனர்கள் வாய்ஸ் கமாண்ட்களை பயன்படுத்தி Meta AI உடன் தொடர்பு கொள்ள அனுமதிக்கும். இந்த புதிய அம்சம், பயன்பாட்டின் எதிர்கால புதுப்பிப்பில் சேர்க்கப்பட உள்ளது, இது அரட்டை அடிப்பதை மென்மையாகவும் உள்ளுணர்வுடனும் செய்ய உறுதியளிக்கிறது.
வாய்ஸ் சாட் என்றால் நாம் நம் குரலில் கமாண்ட்டை அனுப்பினால் அதற்கு Meta AI எழுத்துக்கள் மூலம் பதிலளிக்குமா என்றால், இல்லை இரண்டு பக்கம் இருந்தும் குரல் அரட்டைகளை வாட்ஸ்அப் உறுதிசெய்கிறது. இது மெசேஜ்களை டைப் செய்து செய்யும் உரையாடலை இன்னும் எளிமையானதாக மாற்றுகிறது.
இந்த அம்சத்தின் ஸ்பெசலான விசயம் என்னவென்றால், மெட்டா AI-க்கான குரலை பல்வேறு விருப்பங்களிலிருந்து பயனர்களே தேர்வு செய்துகொள்ளலாம். இதன் பொருள், உங்கள் தனிப்பட்ட விருப்பத்திற்கு ஏற்ற குரலை நீங்கள் தேர்வு செய்யலாம், அதனால் AI உடனான உங்கள் உரையாடல் மிகவும் பொருத்தமானதாகவும் ஈடுபாட்டுடனும் இருக்கும்.
புதிய வாய்ஸ் சாட் அம்சத்தை பயன்படுத்துவதை இன்னும் எளிதாக்க, வாட்ஸ்அப் ஒரு ஷார்ட்கட் அம்சத்தையும் அறிமுகப்படுத்துகிறது. இந்த ஷார்ட்கட், அரட்டைப் பட்டியலின் கார்னரில் மிதக்கும் செயல் பொத்தானாகக் கிடைக்கும்.
அதை பயன்படுத்தி, நீங்கள் Meta AI ஐச் செயல்படுத்தலாம் மற்றும் குரல் தொடர்புகளைத் தொடங்கலாம். இந்த அம்சம் AIக்கு விரைவான அணுகலை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது ஏற்கனவே ஆண்ட்ராய்ட் பயனாளர்களுக்கு அப்டேட் செய்யப்பட்ட வாட்ஸ்அப்பில் கிடைக்கும் நிலையில், அனைத்துவிதமான மொபைல்களுக்கும் கிடைக்கும் வகையில் செயல்படுத்தப்பட உள்ளது.
கூடுதலாக GIPHY ஸ்டிக்கர் தேடல் அம்சத்தையும், Username PIN பயன்படுத்தும் அம்சத்தையும் அறிமுகப்படுத்தும் வேளையில் வாட்ஸ்அப் இருந்துவருகிறது.