whatsapp new feature web
டெக்

WhatsApp அப்டேட்: மொபைல் தேவையில்லை.. மற்ற லிங்க்டு சாதனங்களிலும் contacts-ஐ சேர்க்கலாம், நீக்கலாம்!

வாட்ஸ்அப் தங்களுடைய பயனர்களின் தனியுரிமையை மெருகூட்டும் வகையில் Contact syncing என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தவிருக்கிறது.

Rishan Vengai

வாட்ஸ்அப் செயலியானது தொடர்ந்து தங்களுடைய வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் புதிய அப்டேட்களை அறிமுகப்படுத்தி வருகின்றது. அந்த வரிசையில் பயனர்கள் Meta AI உடன் வாய்ஸ் சாட் செய்யும் புதிய அம்சத்தை வெளியிட்ட வாட்ஸ்அப், சமீபத்தில் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை மற்றவர்களுக்கு டேக் செய்து பதிவிடும் அம்சத்தையும் அறிவித்திருந்தது.

இந்நிலையில் வாட்ஸ்அப் பயனர்கள் லேப்டாப், டேப் முதலிய மற்ற சாதனங்களில் வாட்ஸ்அப் கணக்கை பயன்படுத்தும்போது, தனித்தனியான தனியுரிமைகளை கொண்டிருப்பதாக எழுப்பப்பட்ட பிரச்னைகளுக்கு தீர்வு எட்டும் வகையில் புதிய அம்சத்தை வெளியிட தயாராகியுள்ளது.

WhatsApp

அதன்படி வாட்ஸ்அப் பயனாளர்கள் லிங்க்டு டிவைஸ்களில் பயன்படுத்தும்போது மாற்றங்களை மேற்கொள்ளும் இரண்டு ஸ்பெசலான தனியுரிமைகளை பெறுகிறார்கள்.

மொபைல் இல்லாமல் Contacts-ஐ திருத்தலாம்..

WABetaInfo-ன் சமீபத்திய அறிக்கையின்படி, WhatsApp ஆனது Contact syncing என்ற புதிய அம்சத்தை வெளியிடுகிறது. அதன்படி "Turn on Contacts, Delete Contacts" என்ற டேப்ஸ் மூலம் பயனர்கள் லிங்க்டு டிவைஸ்களில் தொடர்புகளை நிர்வகிக்க அனுமதிக்கிறது.

அதாவது, பயனர்கள் தங்கள் மொபைல் ஃபோன்களை நம்பாமல், தங்கள் WhatsApp கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள எந்த சாதனத்திலிருந்தும் தொடர்புகளைச் சேர்க்கவும், நீக்கவும் முடியும்.

எடுத்துக்காட்டாக, டேப்லெட் அல்லது டெஸ்க்டாப்பில் வாட்ஸ்அப்பைப் பயன்படுத்துபவர்கள், தங்கள் தொடர்புப் பட்டியலை இன்னும் மாற்றியமைக்க முடியும், நாம் செய்யும் அந்த மாற்றங்கள் தானாகவே இணைக்கப்பட்ட அனைத்து சாதனங்களிலும் ஒத்திசைக்கப்படும். இது அனைத்து டிவைஸ்களில் ஒருங்கிணைக்கப்பட்ட அனுபவத்தை வழங்குகிறது.

Turn on Contacts டேபை பயன்படுத்துவதன் மூலம் உங்களால் மற்ற டிவைஸ்களில் செய்யப்படும் கான்டாக்ட் மாற்றங்கள், அனைத்து டிவைஸ்களிலும் ஒத்திசைக்கப்படும். Delete Contacts டேபை பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் செய்யும் மாற்றங்கள், மற்ற டிவைஸ்களில் ஒத்திசைக்கப்படாது.

மேலும் இந்த அம்சமானது கிரிப்டோகிராஃபிக் ஹாஷ்களை WhatsApp-ல் பயன்படுத்தி, நீங்கள் உங்கள் அக்கவுண்ட்டை டெலிட் செய்த பின் மீண்டும் லாக்-இன் செய்யும்போதும் அனைத்து தொடர்பு எண்களையும் சேகரிக்க வழிவகை செய்கிறது. நீங்கள் புதிதாக தொடர்பு எண்களை சேகரிக்க வேண்டிய அவசியமில்லை. இதை பயனாளர்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர்.