டெக்

வாட்ஸ் அப்பில் ஃபிங்கர் பிரிண்ட் லாக் வசதி! 

வாட்ஸ் அப்பில் ஃபிங்கர் பிரிண்ட் லாக் வசதி! 

webteam

ப‌யனாளர்களின் தனிப்பட்ட உரையாடல்களை பாதுகாத்துக்கொள்ள ஃபிங்கர் பிரிண்ட் லாக் வசதியை வாட்ஸ் அப் நிறுவனம் பீட்டா வெர்ஷனுக்கு நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது.

உலக அளவில் பல கோடி மக்கள் உபயோகப்படுத்தும் வாட்ஸ்அப்பை ஃபேஸ்புக் நிறுவனம் விலைக்கு வாங்கியதும், அடுத்தடுத்து அப்டேட்களை வழங்கி வருகிறது. ‌

அந்த வகையில் பயனாளர்களின் தகவல் பரிமாற்றங்களில் பாதுகாப்பை அதிகரிக்க ஃபிங்கர் பிரிண்ட்டின் மூலமாக வாட்ஸ் அப்பிற்குள் நுழையும் வசதியை கொண்டுவரவுள்ளதாக வாட்ஸ் அப் நிறுவனம் கடந்த ‌ஜ‌னவரி மாதம் அறிவித்திருந்தது. இந்தப் புதிய அம்சம் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில்‌ சோதிக்கப்பட்டு, ஆண்ட்ராய்டு பீட்டா வெர்ஷன் 2.19.221ல் நடைமுறைக்கு வந்துள்ளது

அதன்படி அப்டேட் செய்யப்பட்ட வாட்ஸ் அப்பில் உள்ள, அக்கவுண்ட் ஆப்ஷனுக்கு சென்று அதிலுள்ள பிரைவேசி ஆப்ஷனை கிளிக் செய்தால் FINGER PRINT LOCK என்ற வசதி கொடுக்கப்பட்டுள்ளது அதனை ஆன் செய்தால் ‌‌கை ரேகை கேட்கும்‌. பயனாளர் தங்கள் கைரேகையை கொடுக்க அனுமதித்தால் வாட்ஸ் அப் லாக் ஆ‌‌கிவிடும். 

அதன்பிறகு வாட்ஸ் அப்பை திறக்க ‌பயனர்களின் கைரேகை அவசியம். இதேபோல் நாம் ஒருவருக்கு ஃபார்வேர்டு செய்யும் செய்தி எத்தனையாவது முறையாக பரிமாறப்பட்டுள்ளது என்ற ஆப்ஷனும் அப்டேட் செய்யப்பட்டுள்‌ளது.