டெக்

ஆப்பிள் பயனாளர்கள் பயன்பெறும் வகையில் 'வாட்ஸ்அப் பிசினஸ்' செயலி

ஆப்பிள் பயனாளர்கள் பயன்பெறும் வகையில் 'வாட்ஸ்அப் பிசினஸ்' செயலி

webteam

ஆப்பிள் பயனாளர்கள் பயன்பெறும் வகையில் வாட்ஸ்அப் பிசினஸ் செயலியின் பீட்டா வெர்ஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

இந்தியாவில் அதிக மக்கள் பயன்படுத்தும் தகவல் பரிமாற்ற செயலியாக வாட்ஸ்அப் உள்ளது. இந்த செயலியில் எழுத்து, புகைப்படம், வீடியோ ஆகியவற்றை நொடிப்பொழுதில் பரிமாறிக் கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல் போன் அழைப்புகள், வீடியோ அழைப்புகள் என நிறைய வசதிகள் இருப்பதால் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. 

தனி நபருக்கான வாட்ஸ்அப் செயலியை போலவே, சிறு தொழில் செய்பவர்களை மனதில் வைத்து வாட்ஸ்அப் பிசினஸ் ஆப் உருவாக்கப்பட்டது. ஆனால் ஆண்டிராய்டு பயனாளர்களுக்கு மட்டுமே இந்த வசதி கொடுக்கப்பட்டது.  iOS பயனாளர்களுக்கு இந்த வசதி கொடுக்கப்படவில்லை. இதற்கிடையே iOS பயனாளர்களுக்கும் இந்த வாட்ஸ்அப் பிசினஸ் வசதி கொடுக்கப்பட்டால் வாடிக்கையாளர்களிடம் தொடர்பு கொள்வது எளிதாக இருக்கும் என பலரும் கோரிக்கை விடுத்தனர். 

அதன்படி ஆப்பிள் பயனாளர்களும் பயன்பெறும் வகையில் வாட்ஸ்அப் பிசினஸ் செயலியின் பீட்டா வெர்ஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது சோதனை முயற்சியாக இருக்கும் இந்த செயலி வரவேற்புக்கு ஏற்ப விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகும் என வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த வாட்ஸ்அப் பிசினஸ் செயலி மூலம் சிறு, குறு, நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்களை எளிதாக தொடர்புகொண்டு, வர்த்தகம் தொடர்பான விஷயங்களை பகிர்ந்து கொள்ள முடியும், அதேபோல் வாடிக்கையாளர்கள் தொடர்பு கொள்ளும்போது அவர்களுக்கு ஆட்டோ ரிப்ளை அனுப்புதல் போன்ற பல விஷயங்கள் இந்த செயலியில் உள்ளதால் சிறு, குறு, நிறுவனங்கள் இடையே நல்ல வரவேற்பு பெற்றது.